திங்கள், 25 செப்டம்பர், 2017

சென்னையில் விஜய தசமி அன்று அடிப்படை சார ஜோதிட பயிற்சி ஆரம்பம். (Basic KP Astrology Class)

சென்னையில் விஜய தசமி அன்று அடிப்படை சார ஜோதிட பயிற்சி ஆரம்பம்.
(Basic KP Astrology Course)

தகுதி: ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது

பயிற்சி ஆரம்ப நாள்: விஜய தசமி அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 30.09.2017 , சனிக்கிழமை
அதற்கு பிறகு புதன் தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: இரண்டு மாதங்கள்
இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
68, 3- வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.
சென்னை , காட்டுபாக்கம் செல்: 93823 39084

கட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1000 /-மற்றும் மாத கட்டணம் ரூ.1500 /- (அதாவது மொத்தம் 4000 /-)

சிறப்பு சலுகை:
1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
பதிவு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு. முதலில் வரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம்.

தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதத்தில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.

அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம்:
பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.
பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்
பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.
பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்
பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்
பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.
பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்
பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.
பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.
பாடம் 12 : அடிப்படை K.P. ஜோதிட முறை கணிதம், உபநட்சத்திரம் என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.
மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக