உயர் கணித சார ஜோதிட பயிற்சி

சார ஜோதிட (STELLAR ASTROLOGY) பயிற்சி:


        எமது ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம், 2006 -இல் முதலில் 10 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கபட்டது. இன்று வரை 8000 மேற்பட்ட மாணவர்கள் எமது பயிற்சி மையத்தின் மூலம் உயர் கணித சார ஜோதிடம் (Advanced KP Stellar Astrology) பயின்று உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் பல ஜோதிட விற்பன்னர்கள் எமது பயிற்சி மையத்தில் குருகுல முறையில் தங்கி உயர்கணித சார ஜோதிடத்தை கசடற கற்று , அங்கு பிரபல ஜோதிடர்களாக உள்ளனர்.

        குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED K.P STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.  

பிரிவு - 1 அடிப்படை சார ஜோதிட பயிற்சி
(Basic Stellar Astrology Course)

 
         தகுதி: ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது பயிற்சி நேரம்: புதன் தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை பயிற்சி காலம்: இரண்டு மாதம் முன்பதிவு கட்டணம்: கட்டணம் ரூ.5000/-மற்றும் மாத கட்டணம் ரூ.2500/- (அதாவது மொத்தம் 10000/-)

        அனுமதி கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு. முதலில் வரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம். தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதத்தில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.  

அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம்:
 
பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம். 
   
பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்
 
பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.  

பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும் 
   
பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்  

பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.  

பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்  

பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.  

பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.  

பாடம் 12 : அடிப்படை K.P. ஜோதிட முறை கணிதம், உபநட்சத்திரம் என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.  

பிரிவு - 2 உயர்நிலை சார ஜோதிட பயிற்சி
(Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.  

பயிற்சி நேரம்: ஞாயிறு தோறும் காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 
மணிவரை பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, 
மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.4300 (தங்கும் இடம், மதிய உணவு வசதி உட்பட)  

உயர்நிலை சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:  

பாடம் 1 : பாரம்பரிய ஜோதிட முறையை விட உயர்கணித சார ஜோதிட முறை (Advanced KP Stellar Astrology) எந்தெந்த வகையில் மேம்பட்டது, தனித்தன்மையானது, அறிவு பூர்வமானது என விளக்குதல். கே.பி. ஜோதிட கணித முறைகளை சுருக்கமாக விளக்குதல், 12 பாவ ஆரம்ப முனைகளின் தனித்தன்மையை விளக்குதல், அதாவது 12 பாவங்களின் கொடுப்பினையை பாவ ஆரம்ப முனைகள் மூலம் எப்படி அறிவது என விளக்குதல்.  

பாடம் 2 : 9 கிரகங்கள், 12 பாவங்களின் காரகங்களை இன்றைய நவீன காலத்திற்கேற்ப விரிவாக விளக்குதல். ஒரு பாவம், மற்ற 12 பாவங்களுக்கு தரும் விளைவுகளை திரிகோண அடிப்படையில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல். 12 பாவ ஆரம்ப முனைகளின் உபநட்சத்திரங்களான விதி என்ற கொடுப்பினையை, மதி என்ற தசா புத்திகளோடு எப்படி இணைத்து பகுத்து, ஜாதக பலனை நிர்ணயிப்பது என பயிற்சி அளித்தல்.  

பாடம் 3 : பாவதொடர்பு என்றால் என்ன? ஒவ்வொரு பாவமும் மற்ற பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை விளக்குதல். உதாரண ஜாதகம் (பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களின் ஜாதகம்) மூலம் 12 பாவங்களின் கொடுப்பினைகளுக்கான பலன்களையும், தாச புத்திகளுக்கான பலன்களையும் சிறப்பு விதிகளை கொண்டு விளக்குதல்.  

பாடம் 4 : குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பாவத்தின் கொடுப்பினையை விரிவாக அலசுதல், அதாவது ஆய்வுக்கு எடுத்து கொண்ட ஒரு பாவத்தின் எல்ல வித காரகங்களையும் (அகம், புறம் சார்ந்த) பல கோணங்களில் அலசுதல். மேற்கண்ட பாவம் மற்ற 12 பாவங்களுடன் கொள்ளும் தொடர்புகளால் உண்டாகும் விளைவுகளையும், மற்ற 12 பாவங்கள் நாம் ஆய்வுக்கு எடுத்து கொண்ட பாவத்தினை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளையும் விரிவாக அலசுதல். மேலும் தசா, புத்திகள் மீது மேற்கண்ட பாவம் செலுத்தும் ஆதிக்கத்தையும் விளக்குதல்.  

பாடம் 5 : பல்வேறு உதாரணங்களை (பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களின் ஜாதகங்கள்) பல்வேறு கேள்விகளுக்கு பல கோணங்களில் ஆய்வு செய்து ஜாதக பலனை நிர்ணயம் செய்வது எப்படி என விளக்குதல்.  

பாடம் 6 : பல்வேறு உதாரண ஜாதகங்களை (பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களின் ஜாதகங்கள்) மாணவர்களிடம் கொடுத்து, அதில் பல்வேறு கேள்விகள் கேட்டு, அந்த கேள்விகளுக்கான பதிலை மாணவர்களிடம் பெரும் பயிற்சி.

ஒவ்வொரு ஜாதகத்திற்கும் அனைத்து மாணவர்களிடம் பெரும் பதில்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும், தவறுதலான பதிலை தெரிவிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் அதனை தெளிவுபடுத்தும் பயிற்சி.
மாலை சுமார் 3.30 மணிக்கு பிறகு அனைத்து மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட ஜாதகத்திற்கு பத்து கேள்விகளுக்கு ஒரே மாதிரியான பதிலை தருவார்கள். அதாவது மூன்று நாள் உயர் கணித சார ஜோதிட பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் பயிற்சி நிறைவு பெரும் அன்று மதியம் 3.30 மணிக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதகத்திற்கு ஒரே மாதிரியான பலனை நிர்ணயம் செய்வார்கள் என்பது எமது பயிற்சி மையத்தின் தனி சிறப்பு.
 
பிரிவு 3 தொழில் முறை ஜோதிட பயிற்சி:
(Professional K.P. Stellar Astrology)
 
தகுதி: உயர்நிலை சார ஜோதிட பயிற்சியினை எமது பயிற்சி மையத்தில் படித்திருக்க வேண்டும். பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பயிற்சி காலம்: இரண்டு நாள் சிறப்பு பயிற்சி மாதந்தோறும் முதலாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கட்டணம்: இரண்டு நாட்களுக்கும் ரூபாய் – 2000/- (மதிய உணவு உட்பட)  

தொழில் முறை சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:

திருமண பொருத்தம், தொழில் நிர்ணயம், தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் கால நிர்ணயம், ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், பிறந்த நேரத்தை சரி செய்தல், பிரசன்ன ஜாதக பலனை நிர்ணயம் செய்தல், ஜோதிட மென்பொருளை கையாளுதல் போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கி பயிற்சி அளிக்கும் பாட திட்டங்களை கொண்டுள்ளது.
For more details:

1.  Website https://www.astrodevaraj.com/ 

2.  you tube channel  https://www.youtube.com/user/astrodevaraj

3. Face Book Link https://www.facebook.com/groups/stell ...

No comments:

Post a comment