கட்டுரைகள் (மருத்துவம்)




புத்தகத்தின் பெயர் :மருத்துவ ஜோதிடம்

நூல் ஆசிரியர் : ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ்

மேற்கண்ட புத்தகத்தை பெற Call: 9382339084 

புத்தகத்தின் விலை ரூ 350/- 

Google pay No : 9445721793



மருத்துவ ஜோதிடம்

6ம் பாவமும் ஆரோக்கியமும்

 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. அந்த வகையில் ஒருவருடைய ஆரோக்கியம் தான் அவருக்கு உண்மையான செல்வம் ஆகும்.

ஜோதிடத்தில் 6ம் பாவம் என்பது நோயை குறிக்கும் பாவமாகும். உடல் கூறில் 6ம் பாவம், வயிற்று பகுதியை குறிக்கும். குறிப்பாக இரைப்பையை 6ம் பாவம் குறிக்கும்.

அதேநேரத்தில் 6ம் பாவம் என்பது உணவு, மருந்து, நோய் கிருமி போன்றவற்றையும் குறிக்கும். ஒருவருடைய உடலில் நோய் வருவதற்கு முதற்காரணம், வயிற்றுக்கு அனுப்பப்படும் உணவே ஆகும்.

அவ்வாறு அனுப்பப்படும் உணவானது சில நேரத்தில் நச்சாக மாறுவதும், அல்லது உட்கொள்ளும் உணவே நச்சுத்தன்மை கொண்டதாக இருப்பதும் அல்லது உணவுடன் சேர்ந்து வேறு நோய்க்கிருமிகள் உடலினுள் செல்வதும் நோய் வருவதற்கு முதற்காரணமாகும்.

மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கியமான உறுப்புகள் உடம்பில் இருந்தாலும் இவற்றிற்கு 6ம் பாவத்தின் காரகமான வயிறு தான் முக்கியமானது.

வானம் பார்த்த விவசாயி போல், வயிறு பார்த்த உறுப்புகள் தான் அவைகள் எல்லாம், என்பதை வாசகர்கள் கவனிக்கவும்.

குறிப்பாக ஒருவரின் உணவு பழக்க வழக்கங்களே அவரின் நோய்க்கு முக்கிய காரணமாகின்றது.

மேலும் கால சக்ர (புருஷ) தத்துவத்தின் படி பார்த்தோமானால் 6ம் வீடு கன்னி ராசியை குறிக்கும் கன்னி ராசி என்பது நமது உடல் கூறில் வயிற்றுப் பகுதியை குறிக்கும் என்பதை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.

எனவே நோய்க்கும், வயிற்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு என்பதை இதன் மூலம் அறியலாம்.

அதாவது 6ம் பாவம் உணவு, வயிறு, நோய் போன்றவற்றை குறிப்பதால் பெரும்பாலும்நமது நோய்கள் எல்லாவற்றிற்கும் நாம் உட்கொள்ளும் உணவே ஒரு காரணம் என்ற உண்மையை இதன் மூலம் மருத்துவ ஜோதிடம் நமக்கு உணர்த்துகின்றது.

மேலும் 6ம் பாவத்திற்கு திரிகோண பாவங்களாகிய 2,6,1௦ம் பாவங்களுக்கும், நமது உடல் கூறுகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

2ம் பாவம் நம்முடைய வாய், தொண்டை முதலியவற்றையும், 6ம் பாவம் வயிறு, இரைப்பை, 1௦ம் பாவம் உடலுக்கு சக்தியை உற்பத்தி செய்யும் உறுப்புகள். இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது மருத்துவ அறிவு உள்ள அனைவருக்கும் நன்றி தெரியும்.

ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 7ம் பாவம் என்பது சம சப்தம பாவம் அல்லது சமமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அல்லது சமமாக அந்த பாவத்தை வைத்திருக்கக் கூடிய பாவமாக கருதப்படுகின்றது.

அதேபோல் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 6ம் பாவம் (7க்கு 12ம் பாவம்) என்பது அந்த பாவத்திற்கு சமமில்லாத தன்மையையும், சமமாக அந்த பாவத்தை வைத்திருக்க முடியாததை குறிக்கும்.

லக்னபாவம் என்பது மொத்த உடலையும் குறிக்கும். 7ம் பாவம் என்பது எதையும் பகிர்ந்து கொள்ளுதல் என்பதையும் குறிக்கும்.

மருத்துவ ஜோதிடத்தில் 7ம் பாவம் என்பது உடலிலுள்ள உறுப்புகளுக்கு உடல் தனக்கு தானே சமமாக முக்தி அல்லது சக்தியினை பகிர்ந்து கொள்வதை குறிக்கும்.

அதாவது உடலிலுள்ள உறுப்புகளுக்கு எந்த எந்த சத்துப்பொருட்கள் தேவையோ அதை கூட்டியோ அல்லது குறைத்தோ இல்லாமல் சம அளவில் கிடைக்க வழி செய்வது 7ம் பாவம் ஆகும்.

சுருக்கமாக சொன்னால் உடல் சம நிலையில் இருப்பதும் ஒன்றோடொன்று சேர்ந்து உடல் உறுப்புகள் கூட்டமாக இணைந்து செயல்படுவதையும் 7ம் பாவம் குறிப்பிடும்.

7ம் பாவத்திற்கு 12ம் பாவமான 6ம் பாவம் என்பது எதையும் உடல் உறுப்புகளுக்கு சமமாக பகிர்ந்து கொடுக்க முடியாததையும், ஒரு குறிப்பிட்ட உறுப்பில், ஒரு குறிப்பிட்ட சத்துப்பொருட்கள் குறைவாகவும், ஒரு குறிப்பிட்ட சத்துப்பொருட்கள் அதிகமாக உள்ளதையும், அதனால் அந்த உறுப்பு மற்ற உறுப்புகளோடு இணைந்து செயல்பட முடியாததையும் 6ம் பாவம் குறிக்கும்.

அதாவது, உடலில் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் ஏற்பட்டுள்ள சத்து பற்றாக்குறையையும், அதனால் மேற்கண்ட உறுப்பு மற்ற உறுப்புகளோடு ஒத்து போகாது முரண்டு பிடிப்பதையும் குறிக்கும்.

உடலோடு ஒத்து போகாத உறுப்பினை மூளைக்கு அடையாளம் காட்டுவதே நோய் ஆகும்.

அதாவது, உடலில் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் உள்ள நோய் என்பதே அந்த உறுப்பிற்கு தேவையான ஒரு குறிப்பிட்ட சத்து குறைப்பாட்டினால் வருவதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

அந்த குறிப்பிட்ட சத்துக்கள் அதிகம் கொண்ட மாத்திரையை நோயாளிகள் உட்கொள்ளும் போது அது வயிற்றில் சென்று செரிமானம் ஆகி அந்த சத்து இரத்தத்தில் கலந்து, இரத்த ஓட்டத்தின் மூலம் மேலே குறிப்பிட்ட உறுப்பினை சென்றடைகின்றது.

உணவு என்பதை 6ம் பாவம் குறிப்பிடுவதை நாம் அறிவோம் உணவு என்பதே ஒரு குறிப்பிட்ட சத்து அதிகமாகவும், ஒரு குறிப்பிட்ட சத்து குறைவாகவும் உள்ள பொருள் ஆகும்.

உதாரணமாக அரிசியில் மாவு சத்து என்னும் கார்போ ஹைட்ரேட் அதிக அளவும், பருப்பு வகைகளில் புரத சத்து அதிக அளவும் உள்ளதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.@

உடலுக்கு தேவையான ஒரு குறிப்பிட்ட சத்து குறைந்தாலும் அல்லது தேவைக்கு அதிகமாக உடலில் இருந்தாலும் நோய் வருகின்றது.

ஒரு குறிப்பிட்ட சத்து உடலில் அதிகமானால் உடல் எப்படியாவது அதை எதிர்த்து போராடி கழிவுப் பொருட்களாக அதை வெளியேற்றி விடும்.

தேவைக்கு அதிகமான சத்துக்கள் உடலுக்கு அந்நியமாகின்றது. அந்த அந்நியத்தை நீக்குவதற்கு நமது உடல் தன் இயக்கத்தை மாறுபடுத்திக் காட்டுகின்றது.

இந்த இயக்க மாறுபாட்டை அல்லது போராட்டத்தைத் தான் நாம் நோய் என்கிறோம்.

அதாவது 6ம் பாவம் என்பது பகை உணர்வு, மற்றவரை வீழ்த்துதல், போராடுதல், சண்டையிடுதல், மற்றவருடன் இணையாமல் தனித்திருத்தல் போன்ற காரகங்களை கொண்டுள்ளது.

இந்த காரகங்களை மருத்துவ ஜோதிடத்தில் சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்த வேண்டும் என்பதை அன்பர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

7ம் பாவம் என்பது லக்னத்திற்கு சமமான விளைவுகளை ஏற்படுத்தும் பாவம் என்பதால், லக்னம் என்ற ஜாதகருக்கு சமமான தகுதி உடையவர்களை 7ம் பாவம் குறிக்கும்.

அதேபோல் 12ம் பாவம் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியாத அல்லது காண முடியாத இரகசியங்களை குறிக்கும். 12ம் பாவத்திற்கு 8ம் பாவமான 7ம் பாவம் என்பது நமக்கு தெரிகின்ற மற்றும் புரிந்து கொள்ளக்கூடிய வெளிப்படையான விஷயங்களை குறிக்கும்.@

சுருக்கமாக கூறினால் 7ம் பாவம் என்பது நமக்கு சமமான தகுதியுடைய, நமக்கு வெளிப்படையாக தெரிகின்ற நபர்களை அல்லது விஷயங்களை குறிக்கும்.

அந்த வகையில் 6ம் பாவம் என்பது நமக்கு சமமற்ற, நம்மை விட பலம் குறைந்த, நமது தகுதிக்கு குறைந்த, நமக்கு வெளிப்படையாக தெரியாத நபர்களை அல்லது விஷயங்களை குறிக்கும்.

மேற்கண்ட விஷயங்களை கருத்தில் கொண்டு 6ம் பாவம் என்பதை மருத்துவ ஜோதிடத்தில் நம்மை விட உருவத்தில் சிறியதாகவும், நமக்கு தெரியாததாகவும் (கண்ணுக்கு தெரியாத) உள்ள பாக்டீரியா, வைரஸ், போன்ற நோய்களை உருவாக்கும் நுண்ணிய உயிரினங்களை அதாவது கிருமிகளை குறிக்கும் பாவமாக கருதலாம்.

அதாவது 6ம் பாவம் என்பது நோய்களை உருவாக்கும் கிருமிகளையும், நம் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட சத்துக்களை குறி வைத்து உறிஞ்சக்கூடிய கிருமிகளையும் குறிக்கும்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு அந்த பாவத்திலிருந்து வரும் 4,8,12ம் பாவங்களே தீமையை செய்யும் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் 6ம் பாவம் என்பது லக்னத்திற்கு 4,8,12ம் பாவமாக வரவில்லை.

எனவே 6ம் பாவம் குறிப்பிடும் நோய்கள் உடனடியாக லக்னம் என்ற ஜாதகருக்கு பிரச்சனைகளை தராது.

 அதே நேரத்தில் 6ம் பாவம் என்பது லக்னத்திற்கு மிகவும் சாதகமான பாவமாகவும் இல்லை.

ஆனால் லக்னம் என்பது 6ம் பாவத்திற்கு 8ம் பாவமாக உள்ளதால் லக்னம் என்ற உடலுக்கு நோய் கிருமிகளைச் செயலிழக்கச் செய்யவும் ஆற்றல் உண்டு.

அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 3ம் பாவம் என்பது அந்த பாவத்திற்கு அடுத்த பரிமாணத்தை குறிக்கும் அல்லது மேலே குறிப்பிட்ட பாவத்தை பல மடங்கு உயர்த்தும் (அல்லது  பெருக்க வைக்கும்) என்பது எமது நூல்களை படிக்கும் வாசகர்களுக்கு நன்கு தெரிந்த விதியாகும்.

அந்த வகையில் 6ம் பாவத்திற்கு 3ம் பாவமான 8ம் பாவம் என்பது 6ம் பாவத்தின் காரகங்களான நோய் கிருமிகளை அதிக அளவு பெருக்க வைத்து விடும்.

நோய் கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு உடலில் உற்பத்தி ஆகும்போது லக்னம் என்ற சுய அறிவு அல்லது நோய் எதிர்க்கும் திறன் பெரிய அளவில் குறைந்து விடும்.

அதாவது அதிக அளவு உள்ள நோய் கிருமிகள் உடலை செயலிழக்க வைக்கும்உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பற்றாக்குறை உண்டாக்கும்.

எனவே மேற்கண்ட கிருமிகள் உடலை ஆதிக்கம் செய்து உடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊறு விளைவிக்கும்.

அதாவது 6ம் பாவம் என்பது, நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய நோய்களையும், மருந்துக்கு கட்டுப்படும் நோய்களையும், நம்மால் குணப்படுத்தக்கூடிய நோய்களையும், நோய் கிருமிகள் குறைந்த அளவில் (அதனுடைய சந்ததிகளை உருவாக்கி பெருக்காமல்) உடலில் இருப்பதையும் குறிக்கும்.

மேலும் ஒரே வகையான (ஏதோ ஒரு நோயை மட்டும் தரும் கிருமிகள்) நோய் கிருமிகள் மட்டும் உடலில் இருப்பதையும், நோய் கிருமிகளை வீழ்த்த உடல் போராடுவதையும், உணவு பழக்க வழக்கத்தால் வரக்கூடிய நோய்களையும் வயிற்றின் செயல் திறனையும் குறிக்கும்.

உயர் கணித சார ஜோதிட முறையில் கணிக்கப்பட்ட ஒரு ஜாதகத்தில் 6ம் பாவ முனையில் உள்ள கிரகங்கள் 6ம் பாவ கொடுப்பினை நிர்ணயம் செய்யும்.

அதாவது ஜாதகரது உடலில் நோய் கிருமிகளின் ஆதிக்கம் எப்படி இருக்கும் என்பதையும், மருந்தினை உடல் ஏற்றுக் கொள்ளுமா அல்லது மருந்து வேலை செய்யுமா என்பதையும்...@

நோய் கிருமிகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் உடல் வெற்றி பெறுமா அல்லது நோய் கிருமிகள் வெற்றி பெறுமா என்பதையும், ஜாதகரது வயிற்றின் செயல்திறன் எப்படி உள்ளது என்பதையும்...

ஜாதகரின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட உறுப்பு மற்ற உறுப்போடு ஒத்து போகுமா அல்லது மேற்கண்ட உறுப்பு தனித்து செயல்படுமா என்பதையும், ஜாதகரது உணவு பழக்க வழக்கத்தையும் அதாவது ஜாதகர் எந்த மாதிரி உணவை உட்கொள்வார் என்பதையும், மேற்கண்ட 6ம் பாவ முனையில் உள்ள கிரகங்கள் நிர்ணயம் செய்யும்.

6ம் பாவ முனைகளில் உள்ள கிரகங்களில் 6ம் பாவ உபநட்சத்திரமே வலிமையானவர்.

மேற்கண்ட 6ம் பாவ முனையின் உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தன்னுடைய பாவத்திற்கு பாதகமாக உள்ள பாவங்களை அல்லது லக்ன பாவத்திற்கு பாதகமற்ற பாவங்களை தொடர்பு கொண்டால், ஜாதகருக்கு நோய் கிருமிகள் மூலமோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சத்து பற்றாக்குறையினாலோ வரும் நோய்கள் உடனடியாக தங்களின் வலிமையை இழந்து விடும்.

அதாவது ஒவ்வொரு பாவமும் மற்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் போது தன்னுடைய பாவத்திற்கு ஒரு விளைவையும், மற்ற 11ம் பாவத்திற்கும் ஒரு விளைவையும் தரும்.

அதே நேரத்தில் லக்னத்திற்கு தரும் விளைவை சற்று வலிமையாக தரும். ஒவ்வொரு பாவமும் மற்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் விளைவுகள் அனைத்தையும் லக்னம் என்ற ஜாதகர் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் 6ம் பாவம், தன்னுடைய பாவத்திற்கு பலவீனமான பாவங்களுடன் தொடர்பு கொண்டு தன் பாவ பலனை இழந்தால், அது லக்னத்திற்கு சாதகமான நிலையில் செயல்பட்டு ஜாதகரின் உடலில் நோய் கிருமிகளின் ஆதிக்கம் வெகுவாக குறைந்து, உடல் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க பெரிதும் உதவும். நோய் நொடி இல்லாத வாழ்க்கை அல்லது நோய் வந்தாலும் விரைவில் குணமாகி, நீடித்த நோய்களாக மாறாமல் இருக்கும்.

6ம் பாவ முனையின் உபநட்சத்திர அதிபதி, 6ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டால், 6ம் பாவம் வலிமை பெற்று அது லக்னத்திற்கு பாதகமான நிலையில் செயல்பட்டு நோய் விரைவில் குணமாகாமல் நீடித்த நோய்களாக மாறும்.

குறிப்பாக 6ம் பாவம் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொள்ளும் போது மேற்கண்ட பாவங்கள் லக்னத்திற்கு சாதகமான பாவங்கள் என்பதால் லக்னம் என்கின்ற உடலில் உள்ள 6ம் பாவ காரகமான வயிறு மற்றும் ஜீரண மண்டலங்கள் சரியானபடி தங்களின் பணியை செய்து ஜாதகருக்கு மேற்கண்ட உறுப்புகள் சார்ந்த பிரச்சனைகளை அடிக்கடி தராது.

மேலும் 6ம் பாவம் என்பது ஒருவரது உணவு பழக்க வழக்கங்களை தெரிவிக்கும் பாவம் என்பதால், 6ம் பாவம் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டவர்கள் உடலுக்கு தீமையை தராத நல்ல உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருப்பார்.

அதே நேரத்தில் 6ம் பாவம் இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொள்ளும் போது மேற்கண்ட பாவங்கள் ஏதோ ஒரு வகையில் லக்னம் என்கின்ற உடலுக்கு சாதகமற்ற பாவங்கள் என்பதால், லக்னம் என்ற உடலில் உள்ள 6ம் பாவ காரகங்களான வயிறு மற்றும் ஜீரண மண்டலங்கள் சரியானபடி தங்களின் பணிகளை செய்யாமல் ஜாதகருக்கு மேற்கண்ட உறுப்புகள் சார்ந்த பிரச்சனைகளை அடிக்கடி வந்து, ஜாதகரின் உடலில் நோய் வருவதற்கு சாதகமான அமைப்பினை உண்டாக்கி விடும்.

மேலும் ஜாதகருக்கு நல்ல உணவு பழக்க வழக்கங்கள் இருக்காது. செயற்கை உணவுகளை அதிகம் உண்பார். சரிசம விகித உணவு பழக்க வழக்கங்கள் இருக்காது.

6ம் பாவம் நோயையும், 12ம் பாவம் அந்த நோய்க்கு செலவு செய்து சிகிச்சை பெறுவதையும் குறிக்கும். மேற்கண்ட இந்த 6,12ம் பாவத்திற்கு 12ம் பாவங்களான 5,11ம் பாவங்கள் என்பது ஜாதகர் நோயிலிருந்து குணமாவதை குறிக்கும்.

அதே நேரத்தில் 5,11ம் பாவத்திற்கு 12ம் பாவங்களான 4,1௦ம் பாவங்கள் நோய் குணமாகாமல் அது தீராத நோயாக மாறுவதை குறிக்கும்.

பொதுவாக 6ம் பாவத்தின் உள்ள காரகங்களில் லக்னத்திற்கு (ஜாதகருக்கு) சங்கடங்களை தரும் காரகங்களானநோய், கடன், வழக்கு போன்றவை வளர்ச்சியடையாமலும் (சரம்), என்றும் ஒரே மாதிரி நிலையாக (ஸ்திரம்) இல்லாமல் சூழ்நிலை தகுந்தாற்போல் நோயிலிருந்து குணமாகுதல், கடனை அடைத்த பிறகு வேறு ஒரு சூழ்நிலையில் தேவைக்கேற்ப கடன் வாங்குதல் மற்றும் வழக்குகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருதல் போன்று 6ம் பாவ காரகங்கள் இருந்தால் தான் மனித வாழ்க்கை ஒரு சமநிலையுடன் சீர்படும்.

இதனால் தான் நம் முன்னோர்கள் கால சக்ர (புருஷ) தத்துவத்தின் அடிப்படையில் 6மற்றும் 12ம் பாவங்களை உபய ராசியில் வருமாறு வைத்துள்ளனர்.

12ம் பாவ காரகமான விரையம், முதலீடு, மருந்து செலவு போன்றவைகளும் உபய ராசியின் தன்மைகளோடு (சூழ்நிலைக்கு தகுந்தாற்போல்) நமக்கு செயல்பட வேண்டும்.

எனவே 6ம் பாவ முனையின் உபநட்சத்திர அதிபதி சற்று வலிமை குறைந்து இருப்பது ஜாதகரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 6ம் பாவம் அதிக பலம் பெறும் போது ஜாதகரை என்றும் நோயாளியாகவே வைத்திருக்கும். லக்னமும் 6,8,12ம் பாவ தொடர்பு பெற்றால் நிலைமை இன்னும் மோசமாக அமையும்.

மேற்கண்ட செய்திகளை சுருக்கமாக வேறு விதத்தில் கூறினால் அது பின் வருமாறு அமையும். லகனத்திற்கு 6,8,12ம் பாவங்கள் நோயை தரும். அதே வேளையில் 6ம் பாவத்திற்கு 6,8,12ம் பாவங்களான 11,1,5ம் பாவங்கள் நம்மை நோயிலிருந்து முழுமையாக விடுவிக்கும். இந்த 1,5,11ம் பாவத்திற்கு 12ம் பாவங்களான 4,10,12ம் பாவங்கள், வைத்தியம் செய்து நோய் குணமாகாததை குறிக்கும்.

6ம் பாவ உபநட்சத்திர அதிபதி (அல்லது நட்சத்திர அதிபதி, உப உபநட்சத்திர அதிபதி) தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் மற்ற பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளையும், மற்ற பாவங்கள் 6ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளையும் இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போம். அதற்கு முன் பாவ தொடர்பு என்றால் என்ன என்பதை ஆரம்பநிலை அன்பர்கள் புரிந்து கொள்வதற்காக விளக்குகின்றேன்.

2. பாவத் தொடர்பு என்றால் என்ன

ஒரு குறிப்பிட்ட பாவத்தின் கொடுப்பினையை நிர்ணயிப்பது அந்த பாவத்தின் பாவ முனையின் உபநட்சத்திர அதிபதி (6௦% பங்கும்) உப உபநட்சத்திர அதிபதி (25% பங்கும்) நட்சத்திர அதிபதி (15% பங்கும்) போன்ற 3 கிரகங்களாகும்.

அதன்படி ஒரு குறிப்பிட்ட பாவத்தின் கொடுப்பினையை பெருமளவு நிர்ணயிக்கும் ஆற்றலை அந்த பாவத்தின் உபநட்சத்திர அதிபதியாக உள்ள கிரகம் எதுவோ அதுவே பெறும்.

ஒவ்வொரு கிரகமும், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திர அதிபதி (அல்லது உப உபநட்சத்திர அதிபதி அல்லது நட்சத்திர அதிபதி), தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திர அதிபதிகள் மூலம் வேறு சில பாவமுனைகளை தொடர்பு கொண்டு தன்னுடைய பாவத்திற்கு நன்மையையோ அல்லது தீமையையோ அல்லது நடுநிலையான பலனையோ தரும்.

இது குறிப்பிட்ட அந்த பாவத்தின் கிரகத்தின் விதி அல்லது கொடுப்பினை என அழைக்கப்படுகின்றது.

எனவே இனிவரும் கட்டுரைகளில் பாவம் என்றாலே பாவமுனை என பொருள் கொள்ளவும். பாவமுனை என்பது பாவ நட்சத்திரம் என்ற மூன்று காரகங்களை கொண்டது.

இதில் பாவ உபநட்சத்திரமே வலிமையானது என்பதால், பாவம் என்றாலே பாவ உபநட்சத்திரம் என்றும், பாவதொடர்பு என்றால் பாவ உபநட்சத்திரத்தின் என்றும் வாசகர்கள் பொருள் கொள்ளவும்.

அதாவது ஒவ்வொரு கிரகமும், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் எதுவோ அதுவாகவே மாறுகின்றது. அதன்படி ஒரு கிரகம், தன்னுடைய பாவ பலனை விட தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திர அதிபதிகள் தொடர்பு கொண்ட பாவங்களின் பலன்களை தான் செய்யும்.

அப்படி அந்த பாவங்களின் பலன்களை செய்யும்போது, மேற்கண்ட பாவங்கள் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கிரகம் வைத்திருக்கும் பாவத்திற்கு சாதகமான பாவங்களாக இருக்கும் பட்சத்தில், தனது பாவ பலனை தக்க வைத்துக்கொண்டு, தனது நட்சத்திர, உபநட்சத்திர அதிபதிகளின் பாவ பலன்களை செய்யும்.

மேற்கண்ட நிலையை தான் ஒரு குறிப்பிட்ட பாவம் வேறு சில பாவங்களை தொடர்பு கொள்கின்றது என்றும், இதை பாவதொடர்பு என்றும் கூறுகின்றோம்.

அதே நேரத்தில் ஒரு கிரகம் ஒன்றுக்கு மேற்பட்ட பாவங்களுக்கு உபநட்சத்திர அதிபதியாகவோ, நட்சத்திர அதிபதியாகவோ, அல்லது உப உபநட்சத்திரமாக அமைவதாக வைத்துக் கொள்வோம். மேற்கண்ட கிரகம் அனைத்து பாவங்களையும் தொடர்பு கொண்டு தன்னுடைய பாவகாரக மற்றும் கிரககாரக பலனை தரும்.

அதாவது ஒரு கிரகம் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் எது என்று பார்ப்பதற்கு முன்பே, மேற்கண்ட கிரகம் எந்த எந்த பாவங்களை தன் கையில் வைத்துள்ளது எனவும் பார்க்க வேண்டும்.

உதாரணமாக கீழ்க்கண்ட உதாரண ஜாதகத்தை எடுத்துக்கொள்வோம்.


 

 

(6) 27.35.44

 

(7) 25.37.30

 

சனி 24.27.25

(8) 24.38.06

 

(9) 24.00.20

கேது25.32.00

 

(5) 26.43.44

 

பிறந்த தேதி : 29.11.1972 

கிழமை :

நேரம் : 05.03.50 AM

அட்சாம்சம் : 12.40.00

ரேகாம்சம் : 79.17.00 கி

அயனாம்சம் : 230 28’ 3’’

இடம் : ஆரணி

(10) 24.47.45

(4) 24.47.45

 

(11) 26.43.44

சந் 27.54.01

 

ராகு 25.32.00

(3) 24.00.20

குரு 16.56.14

 

(2) 24.38.06

சூரி 13.23.00

புத 06.53.57

 

 

 

 

 

(1) 25.37.30

செவ் 15.11.53

சுக்  11.59.05

 

(12) 27.35.44

பாவ

ந.அ

உ.ந

உ.உ.ந

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

 

குரு

புத

சுக்

செவ்

குரு

புத

சுக்

செவ்

குரு

புத

சூரி

செவ்

 

புத

ராகு

புத

ராகு

சுக்

குரு

புத

ராகு

புத

ராகு

சூரி

குரு

 

 

 

 

 

 

சனி

குரு

புத

சனி

சுக்

செவ்

சனி

குரு

புத

சனி

சந்

செவ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிரக

ந.அ

உ.ந

சூரிய

சந்தி

செவ்

புத

குரு

சுக்

சனி

ராகு

கேது

 

 

 

 

சனி

சூரிய

ராகு

சனி

சுக்

ராகு

செவ்

சுக்

குரு

 

 

 

 

 

ராகு

சந்

கேது

புத

சந்

சனி

ராகு

புத

புத

 

 

 

 

 

 

     12.பாவங்களின் நிலைகள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    9.கிரகங்களின் நிலைகள்

 


               
      

கிரகத் தொடர்புகள் : அட்டவணை – (விரிவான நிலையில்)

 

 

கிரகம்

நட் அதிபதி

உப நட் அதிபதி

சூரிய+----

உ.உ.அ ----

ந.அ (5,9)

புத (6,8)

உ.உ.அ (1,5)

ந.அ. ----

ராகு (4,10)

உ.உ.அ (6,8,9)

ந.அ. (2,6,10)

சந்+----

உ.உ.அ(3,4,7,12)

ந.அ (1)

சனி (1,2)

உ.உ.அ (10,11)

ந.அ. (3,7,11)

சனி (1,2)

உ.உ.அ (10,11)

ந.அ. (3,7,11)

செவ் ------

உ.உ.அ ------

ந.அ. ------

குரு (7)

உ.உ.அ (2)

ந.அ. ------

சனி (1,2)

உ.உ.அ (10,11)

ந.அ. (3,7,11)

புத (6,8)

உ.உ.அ (1,5)

ந.அ. ----

சனி (1,2)

உ.உ.அ (10,11)

ந.அ. (3,7,11)

சனி (1,2)

உ.உ.அ (10,11)

ந.அ. (3,7,11)

குரு (7)

உ.உ.அ (2)

ந.அ. ------

சுக் (3,5,9,11,12)

உ.உ.அ -------

ந.அ. (12)

ராகு (4,10)

உ.உ.அ (6,8,9)

ந.அ. (2,6,10)

சுக் (3,5,9,11,12)

உ.உ.அ -------

ந.அ. (12)

குரு (7)

உ.உ.அ (2)

ந.அ. ------

சுக் (3,5,9,11,12)

உ.உ.அ -------

ந.அ. (12)

சனி (1,2)

உ.உ.அ (10,11)

ந.அ. (3,7,11)

செவ் ------

உ.உ.அ ------

ந.அ. ------

செவ் ------

உ.உ.அ ------

ந.அ. ------

ராகு (4,10)

உ.உ.அ (6,8,9)

ந.அ. (2,6,10)

சுக் (3,5,9,11,12)

உ.உ.அ -------

ந.அ. (12)

புத (6,8)

உ.உ.அ (1,5)

ந.அ. ----

கேது+---------

உ.உ.அ ---------

ந.அ. (4,8)

குரு (7)

உ.உ.அ (2)

ந.அ. ------

புத (6,8)

உ.உ.அ (1,5)

ந.அ. ----

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

இந்த ஜாதகத்தில் ராகு 2,4,8,10ம் பாவ முனைகளுக்கு உபநட்சத்திரமாக உள்ளார். வேறு எந்த பாவ முனைகளுக்கும் நட்சத்திரமாகவோ அல்லது உபநட்சத்திரமாகவோ வரவில்லை.

எனவே ராகு 2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொள்கின்றார் எனக் எடுத்துகொள்ளலாம்.

அடுத்து 2ம் பாவம் 4,8,10ம் பாவங்களுடன் தொடர்பு கொள்கின்றது என்றும் 4ம் பாவம் 2,8,10ம் பாவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்றும், 8ம் பாவம் 2,8,10ம் பாவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்றும், 1௦ம் பாவம் 2, 4,8ம் பாவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்றும் அன்பர்கள் புரிந்து கொள்ளவும்.

ஆனால் ஜாதகருக்கு ராகு திசை நடைபெறுகின்றது எனில் 2,4,8,10ம் பாவங்களின் பலன்கள் நடைபெறும் எனக்கூறக்கூடாது. 2,4,8,10ம் பாவங்களை குறிவைத்து இந்த திசை நடைபெறுகின்றது.

இதில் 2,4,8,10ம் பாவங்கள் வலுபெறுமா என்றும், மேற்கண்டபாவங்கள் மூலம் லக்னத்திற்கு சாதகமான பலனா அல்லது பாதகமான பலனா என அறிய ராகு நின்ற நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

அந்த வகையில் இந்த ஜாதகத்தில் ராகு, சுக்ரனின் சாரத்திலும், புதனின் உபநட்சத்திரத்திலும் உள்ளது. எனவே ராகு, சுக்ரன் செய்ய வேண்டிய வேலையையும், புதன் செய்ய வேண்டிய வேலையையும் தான் வைத்திருக்கும் 2,4,8,10ம் பாவ காரக ரீதியாக செய்யும்.

அதாவது ராகு, சுக்ரனாகவும், புதனாகவும் மாறிவிடுகின்றது.

இங்கு சுக்ரன் 5ம் பாவமுனைக்கு உபநட்சத்திரமாகவும், 3,7ம் பாவமுனைக்கு நட்சத்திரமாகவும் உள்ளார்.

புதன் 1,3,7,9ம் பாவமுனை உபநட்சத்திரமாகவும், 3,9ம் பாவமுனைக்கு உப உப நட்சத்திரமாகவும், 2,6,1௦ம் பாவமுனைக்கு நட்சத்திரமாகவும் உள்ளது. அதாவது,

 

                     ராகு         சுக்ர         புதன்

உ.அ      2,4,8,10                        5                           1,3,7,9                   

உ.உ                ----                       ----                         3,9

ந.அ                3,7                          ------                    2,6,10

 

 

 

ராகு, தான் நின்ற நட்சத்திரம் (சுக்ரன்) காட்டிய 5,3,7ம் பாவங்களின் வேலைகளையும் உபநட்சத்திரம் (புதன்) காட்டிய 1,3,7,9 மற்றும் 2,6,1௦ம் பாவங்களின் வேலைகளையும் செய்யும்.

அதாவது ராகு 2,4,8,10ம் பாவங்களை தன் கையில் வைத்திருந்தாலும், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலமாக 1,3,5,7,9 மற்றும் 2,6,10ம் பாவங்களை தொடர்பு கொள்கின்றது.

மேற்கண்ட நட்சத்திரமும் , உபநட்சத்திரமும் காட்டிய 1,3,5,7,9 மற்றும் 2,6,10ம் பாவங்களில் 2,6,10ம் பாவங்கள் சற்று பலம் குறைந்த பாவங்கள் ஏனெனில் இவைகள் பாவ உபநட்சத்திரமாக இல்லாமல் பாவ நட்சத்திரமாக உள்ளது.

பாவ நட்சத்திரத்திற்கு எப்போதும் பலம் குறைவாகவே இருக்கும் ஆனால் ஒரு கிரகம் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு உபநட்சத்திரமாக இருந்து, அதற்கு 8,12ம் பாவங்களாக எவை வருகின்றதோ அந்த பாவங்களுக்கும் நட்சத்திரமாக இருந்தால், இந்த நட்சத்திரத்தை விட உப நட்சத்திரம் பலம் குறைந்து விடும்.

அந்த வகையில் இங்கு ராகு நின்ற உபநட்சத்திரம் புதன் 2,6,10ம் பாவங்களுக்கு நட்சத்திரமாக இருந்தாலும் கூட அதே புதன் 1,9ம் பாவங்களுக்கு உபநட்சத்திரமாக அமைந்து உள்ளதால் 2,6,10ம் பாவங்கள் தங்களின் பலத்தினை இழக்கின்றது.

எனவே ராகு 1,3,5,7,9ம் பாவத்தை தொடர்பினால் பெறுகின்றது. மேற்கண்ட பாவங்கள் 2,4,8,10ம் பாவங்களுக்கு பாதகமான பாவங்கள் என்பதால் ராகு தன்னுடைய பலத்தினை இழந்து தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரத்தின் வேலையை செய்கின்றது.

அதே நேரத்தில் ராகுவின் நட்சத்திரத்தில் சூரியன், சனி உள்ளதாலும், ராகு தன் கையில் வைத்திருந்த 2,4,8,10ம் பாவங்களின் காரக வேலையை தானே செய்ய முடியாவிட்டாலும் கூட சுக்ரன், செவ்வாய், சூரியன், சனி போன்ற கிரகங்கள் மூலம் செய்ய வைக்கும் அல்லது மேற்கண்ட கிரகங்கள் ராகுவின் 2,4,8,10ம் பாவ காரக வேலையை செய்வார்கள்.

அந்த வகையில் இந்த ஜாகதத்தில் ராகுவின் பிரதிநிதிகளாக சுக்ரன், செவ்வாய், சூரியன், சனி போன்ற கிரகங்கள் இருப்பதால், மேற்கண்ட 4 கிரகங்களும் 2,4,8,10ம் பாவ காரகங்களை, ராகுவின் கிரக காரகத்தோடு செயல்படுத்துவார்கள்.

ஒரு வேளை ராகுவின் சாரத்தில் எந்த கிரகமும்  இல்லை என்றால் ராகுவே தன்னுடைய 2,4,8,10ம் பாவங்களின் காரகங்களை செய்ய வேண்டிய சுழலுக்கு தள்ளப்படுகின்றது.

அந்த நேரத்தில் ராகு தான் நின்ற நட்சத்திரம் (சுக்ரன்), உபநட்சத்திரம் (புதன்) மூலம் தொடர்பு கொண்ட 1,3,5,7,9ம் பாவங்களோடு 2,4,8,10ம் பாவங்களையும் செயல்படுத்துவார்.

ஒரு பாவம் வலிமை பெற வேண்டுமெனில்

1. அந்த பாவமுனைக்கு உரிய கிரகங்களான பாவ நட்சத்திர அதிபதி, பாவ உபநட்சத்திர அதிபதி, பாவ உப உபநட்சத்திர அதிபதி போன்றவற்றின் நட்சத்திரம், உபநட்சத்திரத்தில் நிறைய கிரகங்கள் இருக்க வேண்டும்.

2. மேற்கண்ட பாவமுனைக்கு உரிய கிரகங்கள், தங்களின் பாவங்களுக்கு சாதகமான பாவங்களாக உள்ள வேறு சில பாவங்களுக்கும் பாவ உபநட்சத்திரமாக அல்லது பாவ நட்சத்திரமாக அல்லது பாவ உப உப நட்சத்திரமாக இருக்க வேண்டும்.

இங்கு பாவ ஆரம்ப முனைகளில் பாவ உபநட்சத்திரமே வலிமையானது என்பதால் ஒரு பாவ முனைக்கு உபநட்சத்திர அதிபதியாக உள்ள கிரகம் தனக்கு சாதகமான அல்லது தன் பாவத்திற்கு 4,8,12ம் பாவங்களாக இல்லாத பாவ முனைகளுக்கு நட்சத்திரமாகவோ, அல்லது உப உப நட்சத்திரமாகவோ அமைந்து விட்டால் தன் பாவப் பலனை ஓரளவிற்கு தானே கெடுத்து கொள்வதில் இருந்து தப்பித்துக் கொள்கின்றது.

எனவே பாவதொடர்பு என்பது ஒரு பாவ ஆரம்ப முனைக்கு உரிய கிரகங்களான பாவ நட்சத்திரம், பாவ உபநட்சத்திரம், பாவ உப உப நட்சத்திரம் போன்றவை தங்களுக்கு உள்ளேயே தொடர்பு கொள்வதும் ஒரு வகை. உதாரணமாக இங்கு ராகு 2,4,8,10ம் பாவங்களை முதல் நிலையில் தொடர்பு கொள்கின்றது எனக்கூறலாம்.

அடுத்து ராகு, தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் 1,3,5,7,9ம் பாவங்களான தொடர்பு கொள்வதால் ராகு திசையில் 2,4,8,10ம் பாவங்கள் செயல்படாமல், ராகுவின் சாரம், உபநட்சத்திரத்தில் உள்ள சுக்ரன், செவ்வாய், சூரியன், சனி போன்ற கிரகங்களின் தசா புத்திகளில் 2,4,8,10ம் பாவங்கள் செயல்படும் என்பதை அன்பர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

எனவே  பாவதொடர்பு என்பதை இரண்டு வழிமுறைகளில் பார்க்க வேண்டும் என்பதை கவனமாக வாசகர்கள் புரிந்து கொள்ளவும்.

அதன்படி ஒரு குறிப்பிட்ட பாவம் மற்ற பாவங்களை தொடர்பு கொள்ளும்போது தனது பாவத்திலிருந்து தொடர்பு கொண்ட பாவங்கள் எத்தனையாவது பாவமோ அதை பொறுத்து, தனது பாவ பலனை நிர்ணயிக்கும்.@@

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட பாவம், தனது பாவத்திலிருந்து பின்வரும் பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை இங்கு தருகின்றேன்.

1. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்தையே தொடர்பு கொண்டால், தனது பலனை எப்படி செய்ய வேண்டுமோ அப்படியே செய்யும்.

அதாவது ஒரு கிரகம், தனது சொந்த நட்சத்திரம், உபநட்சத்திரம், உப உப நட்சத்திரத்தில் இருந்தால் தனது பலனை எப்படி செய்ய வேண்டுமோ அப்படியே செய்யும்.

2. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தை சராசரி அளவை விட சற்று கூடுதலாக மட்டும் வளர்த்து அதற்கு மேல் வளராமல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும்.

3. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 3ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தை, மிக அதிகளவில் பல மடங்கு வளர்த்து விடும். மேலும் தனது பாவத்தை அடுத்த  பரிமாணத்திற்கும் எடுத்து செல்லும்.

4. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 4ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் இடையிலேயே பலமிழந்து விடும்.

குறிப்பாக தனது பாவத்தை 3௦% வரை (3ல் ஒரு பங்கு மட்டும்) மட்டுமே செயல்படுத்தி, பிறகு தனது பாவத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் தனது பலத்தை இழந்து விடுகின்றது.

5. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 5ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தின் காரகங்களை எந்த வித சிரமமும் இல்லாமல் எப்படி இயக்க வேண்டுமோ அப்படி இயக்கும்.

6. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 6ம் பாவத்தை தொடர்பு கொண்டால், மற்றவர்களை வீழ்த்தி அல்லது போராடி தனது பாவத்தை செயல்படுத்தும்.

7. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 7ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தை ஒரு கட்டுப்பாட்டுடன் அல்லது நடுநிலையுடன் செயல்படுத்தும். மேலே குறிப்பிட்ட பாவம் அகச்சார்புடைய பாவம் எனில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தனது பாவத்தை செயல்படுத்தி விடும்.

8. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 8ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தின் காரகங்களை எப்படி செயல்படுத்த வேண்டுமோ அப்படி செயல்படுத்தாமல், தனது பாவத்திற்கு எதிரான நிலையில் அல்லது எதிர்பாராத தீய நிலையில் செயல்படுத்தி விடும்.

9. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 9ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தின் காரகங்களுக்கு ஜாதகர் குறிப்பிடும் அளவுக்கு முயற்சி செய்யாமல் இருந்தாலும் கூட தானாகவே அது ஜாதகரை தேடி வரும் மேலும் மேலே குறிப்பிட்ட பாவத்தை ஜாதகர் எப்படி செயல்படுத்த நினைத்தாரோ (அனுமானம்) அதன்படியே செயல்படுத்துவார்.

1௦. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 1௦ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தன் பாவத்தின் காரகங்களை 7௦% வரை நடத்தி, பிறகு தனது பாவத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் தனது பலத்தை இழந்து விடும்.

இங்கு மேலே குறிப்பிட்ட பாவம் தனது காரகங்களை 7௦% வரை நடத்தி விடுவதால் இது நடுநிலையான தன்மையுடன் தன் பலத்தை பெற்றிருப்பதாக கொள்ளலாம்.

11. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 11ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தன் பாவ பலனை முழுமையான அளவில் செயல்படுத்தும்.

ஒரு குறிப்பிட்ட பாவத்தின் 11ம் பாவம் என்பது அந்த குறிப்பிட்ட பாவத்தின் 12ம் பாவத்தின் 12ம் பாவம் ஆகும். எனவே ஒரு குறிப்பிட்ட பாவத்தின் 12ம் பாவம் சிறிய அளவு கூட செயல்படாது என்பதால் (விரைய ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானம்) குறிப்பிட்ட பாவம் எவ்வித தடைகளும் இன்றி 1௦௦% சிறப்பாக செயல்படும்.

12. ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்திற்கு 12ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவ பலனை 1௦௦% இழந்து விடுகின்றது.

மேலே குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் எதுவோ அவைகள் செய்ய வேண்டிய வேலையை மட்டும் செய்யும் தன் பாவ பலனை செய்யாது.

ஒரு கிரகம் அல்லது ஒரு பாவமுனையின் உபநட்சத்திரம் (நட்சத்திரம், உப உபநட்சத்திரம்) தான் நின்ற நட்சத்திரம் மூலம் ஒரு சம்பவத்தையும், அதே கிரகம் நின்ற உபநட்சத்திரம், நட்சத்திரம் மூலம் ஒரு சம்பவத்தையும், அதே கிரகம் நின்ற உபநட்சத்திரம், நட்சத்திரம் காட்டிய சம்பவத்தை தொடர்ந்து நடத்துவதா அல்லது நட்சத்திரம் காட்டிய சம்பவத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதா என்பதை நிர்ணயம் செய்யும்.

இதையே வேறு மாதிரி கூறினால், கிரகம் நின்ற நட்சத்திரம் காட்டிய பாவங்களின் காரகங்கள் முதலில் நடைபெறும் என்றும், கிரகம் நின்ற உபநட்சத்திரம் காட்டிய பாவங்களின் காரகங்கள் அடுத்ததாக நடைபெறும் என்றும் கூறலாம்.

இங்கு நட்சத்திரம் காட்டிய பாவங்களுக்கு, உபநட்சத்திரம் சாதகமான நிலையில் இருந்தால், நட்சத்திரம் காட்டிய பாவங்களையும், உபநட்சத்திரம் தான் செயல்படுவது போது சேர்ந்து கொண்டு செயல்படுத்தும்.அதாவது நட்சத்திரமும் உபநட்சத்திரமும் சேர்ந்து செயல்படும்.

நட்சத்திரம் காட்டிய பாவங்களுக்கு, உபநட்சத்திரம் பாதகமான நிலையில் இருந்தால், (4,8,12 ம் பாவங்களை காட்டினால்), நட்சத்திரம் முதலில் செயல்பட்ட உடனே தனது பலத்தினை இழந்து விடும். உபநட்சத்திரம் பிறகு  வலிமையாக செயல்படும்.

நட்சத்திரம் காட்டிய பாவங்களுக்கு, உபநட்சத்திரம் 2,6ம் பாவங்களை காட்டினால் நட்சத்திரம் செயல்படும்.

உபநட்சத்திரம் செயல்படாது ஆனால் உபநட்சத்திரத்தின் ஆதரவு நட்சத்திரத்திற்கு கிடைக்காது. எனவே நட்சத்திரம் தனித்து செயல்பட்டு தனது பாவத்தை ஒரு வரைமுறைக்கு மேல் வளர்க்க முடியாமல், சராசரி அளவோடு ஒரு வரைமுறைக்கு உட்பட்டு செயல்படும் எனக்கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

3. 6ம் பாவத்தின் மற்ற பாவதொடர்புகள்

ஒரு பாவத்தின் ஆரம்ப பாகை அல்லது ஆரம்ப முனை எதுவோ, அந்த பாகையிலிருந்து தான் அந்த பாவம் ஆரம்பிக்கின்றது. ஒரு சம்பவம் எப்போது ஆரம்பிக்கப்படுகின்றதோ அப்போதே அந்த சம்பவத்தின் அனைத்து விஷயங்களும் தீர்மானிக்கப்படுகின்றது.

6ம் பாவமுனை என்பது 6ம் பாவமுனையின் நட்சத்திர அதிபதி, 6ம் பாவமுனையின் உபநட்சத்திர அதிபதி, 6ம் பாவமுனையின் உப உப நட்சத்திர அதிபதி போன்ற 3 கிரகங்களையும் குறிப்பதாகும்.

மேற்கண்ட கிரகங்களில், 6ம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதியே வலிமையானவர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

6ம் பாவ முனையின் உப நட்சத்திரமும் (அல்லது நட்சத்திரம், உப உப நட்சத்திரம்) ஒரு குறிப்பிட்ட பாவத்தின் உபநட்சத்திர அதிபதியும் (அல்லது நட்சத்திரம், உப உப நட்சத்திரம்) ஒரே கிரகமாக இருப்பதை 6ம் பாவம் மேலே குறிப்பிட்ட பாவத்தை தொடர்பு கொள்கின்றது என்று ஒரு வகையில் கூறலாம்.

உதாரணமாக 6ம் பாவ உபநட்சத்திரமும், 4ம் பாவ உபநட்சத்திரமும் ஒரே கிரகம் எனில் 6ம் பாவம், 4ம் பாவத்துடன் தொடர்பு கொண்டுள்ளது எனவும் வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

மற்றொரு வகையில் அதை பின்வருமாறும் கூறலாம். 6ம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம்,  உபநட்சத்திரம் மூலம் மற்ற பாவங்களை தொடர்பு கொள்வதும் 6ம் பாவத்தின், மற்ற பாவதொடர்பாகும்.

அந்த வகையில் 6ம் பாவம் பின்வரும் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் விளைவுகளை பார்ப்போம்.

ஒரு குறிப்பிட்ட பாவம் மற்ற பாவத்தை தொடர்பு கொள்ளும் போது, தன்னுடைய பாவத்திற்கு ஒரு விளைவையும், லக்னத்திற்கு ஒரு விளைவையும் தரும். அதே நேரத்தில் தன்னுடைய பாவ காரக வழியாக தொடர்பு கொண்ட பாவங்களின் காரகங்களை செயல்படுத்தும்.

6ம் பாவத்தின் 1ம் பாவத்தொடர்பு

லக்னபாவம் என்பது 6ம் பாவத்திற்கு 8ம் பாவமாக அமைவதால் 6ம் பாவத்தின் 1ம் பாவத்தொடர்பு 6ம் பாவத்திற்கு பாதகமானதாக அமையும். ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 8ம் பாவம் என்பது அந்த பாவத்தை எதிர்மாறான வகையில் இயக்கும்.

அதாவது தொடர்பு கொண்ட பாவம் (இங்கு 6ம் பாவம்) எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படாமல் அல்லது எந்த இலக்கை நோக்கி செயல்பட வேண்டுமோ அந்த இலக்கை நோக்கி செயல்படாமல் தன்னுடைய நிலைக்கு எதிரான நிலையில் செயல்படும்.

அதாவது 6ம் பாவம் என்பதை இங்கு நோய் கிருமிகள் என்றால் லக்னபாவம் என்பதை சுய அறிவு அல்லது நோய் எதிர்க்கும் திறன் எனலாம்.

நோய் கிருமிகள் உடலை பலவீனப்படுத்தும் வேலையைச் செய்ய வெளியில் இருந்து உடலுக்கு வந்திருந்தாலும், அவைகள் எந்த நோக்கத்திற்காக வந்ததோ அந்த வேலையை செய்யாது. அதாவது நோய்கிருமிகள் தங்களுடைய வேலையை செய்யாமல், எதிர்மறையாக செயல்பட்டு, நோயினை உடலுக்கு தராது.

மேலும் 1ம் பாவம் என்பது மூளை அல்லது சுயமாக செயல்படும் அறிவு அல்லது புரிந்து கொள்ளும் அறிவு என்றும் மேலும் தலை முதல் பாதம் வரை உள்ளடங்கிய மொத்த உடல் என்றும் பொதுவாக, ஜோதிடத்தில் கூறலாம்.

மருத்துவ ஜோதிடத்தில் 1ம் பாவத்தை நோய் கிருமிகளை கண்டறியும் அறிவு என்றும், அவ்வாறு நோய் கிருமிகளை கண்டறிந்த பின் அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற மூளை எடுக்கும் நடவடிக்கை என்றும் கூறலாம்.

சுருக்கமாக கூறினால் 1ம் பாவத்தை மருத்துவ ஜோதிடத்தில் நோய் எதிர்க்கும் திறன் என்று கூறலாம்.

அந்த வகையில் 6ம் பாவத்தின் 1ம் பாவத்தொடர்பு என்பது நோய் வருவதற்கு முன்பே இயற்கையாகவே உடல் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் தன்மையைக் குறிக்கின்றது.

6ம் பாவத்தின் 2ம் பாவத்தொடர்பு

2ம் பாவம் என்பது 6ம் பாவத்திற்கு ஒரு சாதகமான அமைப்பாகும். அதே நேரத்தில் 2ம் பாவம் என்பது லக்னத்திற்கு (உடலுக்கு) நடுநிலையான பாவம் என்பதால் 6ம் பாவத்தின் 2ம் பாவத்தொடர்பு மூலம் நோய் கிருமிகளால் உடலுக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் வராது.

லக்னபாவம் என்பது நோய் எதிர்க்கும் சக்தியை குறிப்பதால் 6ம்பாவத்தின் 2ம் பாவதொடர்பு உடையவர்களுக்கு உடலில் நோய் எதிர்க்கும் திறன் நடுநிலையுடன் இருக்கும்.

மேலும் 2ம் பாவம் என்பது 8ம் பாவத்திற்கு 7ம் பாவம் ஆகும். ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 7ம் பாவம் என்பது அந்த பாவத்தைகட்டுப்படுத்தும் என்பதை நாம் அறிவோம்.

அந்த வகையில் 6ம்பாவத்தின் 2ம் பாவதொடர்பு என்பது 6ம் பாவத்தின் மூலம் 8ம் பாவ காரகங்களை கட்டுப்படுத்துவதை குறிக்கும்.

திரிகோணங்கள் ஒரே மாதிரியான தன்மையை குறிக்கும் என்பதால் 6ம் பாவத்திற்கு 2ம் பாவதொடர்பு என்பது திரிகோண பாவம் என்பதால் ஒரே மாதிரியான அல்லது ஒரு உறுப்பில் மட்டும் நோய் என்பதையும், குறிப்பிட்ட ஒரு சத்து மட்டும் உடலில் குறைவாக அல்லது அதிகமாக உள்ளது என்பதையும்6ம்பாவத்தின் 2ம் பாவதொடர்பு தெரிவிக்கும்.

3ம் பாவம் என்பது பயணம் அல்லது இடமாற்றம் என்பதை குறிக்கும். 3ம் பாவத்திற்கு 12ம் பாவம் 2ம் பாவம் என்பதால் 6ம்பாவத்தின் 2ம் பாவதொடர்பு என்பது நோய்க்கிருமி ஒரு உறுப்பிலிருந்து வேறொரு உறுப்பிற்கு இடப்பெயர்ச்சி ஆவதை தடுக்கின்றது.

6ம்பாவத்தின் 3ம் பாவதொடர்பு

6ம்பாவத்தின் 3ம் பாவதொடர்பு என்பது லக்னத்திற்கு சாதகமான பாவமாகவும், 6ம் பாவத்திற்கு 1௦ம் பாவமாக 3ம் பாவம் உள்ளதால், 6ம் பாவத்திற்கு இது நடுநிலையான பாவமாகவும் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 1௦ம் பாவம் என்பது அந்த பாவத்தை 7௦% வரை இயக்கி பிறகு துண்டித்து விடும் என்ற வகையில் நோய் கிருமிகள் நாளுக்குநாள் தங்களுடைய பலத்தை இழந்து விடும்.

3ம் பாவம் என்பது மாற்றங்களை குறிக்கும் பாவம் என்பதால் ஜாதகரின் உடலில் ஒரே விதமான நோய்கள் என்பது இருக்காது.

மேலும் 3ம் பாவம் என்பது பயணம், இடப்பெயர்ச்சி எனப்படுவதால் நோய் கிருமிகள் ஒரே இடத்தில் இல்லாமல் உடலில் நகர்ந்து கொண்டோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு உறுப்பிலிருந்து அடுத்த உறுப்பிற்கோ சென்று விடும்.

குறிப்பாக நோய் கிருமிகள் உடலில் ஏதேனும் ஒரு உறுப்பில் நீண்ட காலம் தங்கினால் தான், மேற்கண்ட உறுப்பு சிறிது சிறிதாக பழுதடைய ஆரம்பிக்கும்

ஆனால் மேற்கண்ட உறுப்பில் நோய் கிருமிகள் சிறிது காலம் இருந்த உடனே லக்னம் என்ற உடல் விழித்துக் கொண்டு நோய் கிருமிகளை அடையாளம் கண்டு மேற்கண்ட உடல் உறுப்பில் நோய்கிருமிகள் வாழ முடியாத சூழலை உடல் உண்டாக்கி அதை உடலை விட்டு வெளியேற்றி விடும்.

3ம் பாவம் என்பதே செய்தி, பதிவு, ஞாபகசக்தி, போன்றவற்றை குறிக்கும். 6ம்பாவத்தின் 3ம் பாவதொடர்பு என்பது நோய் கிருமிகளை பற்றின செய்திகள் மூளைக்கு சென்று கிருமிகள் பற்றின எச்சரிக்கை உணர்வுகளுடன் மூளை செயல்படத்துவங்கும்.

3ம் பாவம் என்பது லக்னத்திற்கு சாதகமான பாவம் என்பதால் 6ம்பாவத்தின் 3ம் பாவதொடர்பு என்பது உடலின் நோய் எதிர்ப்பு திறனை 2௦௦% வலுப்படுத்தும்.

6ம்பாவத்தின் 4ம் பாவதொடர்பு

6ம்பாவத்தின் 4ம் பாவதொடர்பு என்பது, 6க்கு 11ம் பாவமாக அமைவதால் 6ம் பாவம் மிகவும் வலுவடைகின்றது. அதே நேரத்தில் லக்னத்திற்கு 4ம் பாவம் தீமையைத் தரும் பாவமாக உள்ளது.

4ம் பாவம் என்பது என்றும் மாறாத நிலையான தன்மையை குறிக்கும். ஜாதகத்தில் எந்த பாவம் 4ம் பாவத்துடன் தொடர்பு கொள்கின்றதோ அந்த பாவத்தின் காரகங்கள் நிலையாக இருக்கும்.

அந்த வகையில் 6ம் பாவத்தின் 4ம் பாவதொடர்பு என்பது நோய்கள் நிலையான தன்மையுடன் ஜாதகரின் உடலில் இருக்கும். அதாவது குணப்படுத்த முடியாத நோய்களை 4ம் பாவம் குறிக்கும்.

4ம் பாவம் என்பது ஒரே மாதிரியான தன்மையை குறிக்கும் பாவம் என்பதால் 6ம் பாவம், 4ம் பாவத்தை தொடர்பு கொண்ட ஜாதகர்கள் ஒரே உணவை அல்லது ஒரு குறிப்பிட்ட சத்து மட்டும் அதிகம் உள்ள உணவை மட்டும் அடிக்கடி உண்ணக் கூடியவர்களாக இருப்பார்கள். உதாரணம் மூன்று வேளையும் அரிசி உணவையே உட்கொள்வது போன்றவை.

மேலும் 4ம் பாவம் என்பது திடப்பொருள்களையும், செயற்கை பொருட்களையும் குறிப்பதால் 6ம் பாவம், 4ம் பாவத்தை தொடர்பு கொண்ட ஜாதகர்கள் கலோரி அதிகம் உள்ள திடப்பொருள்களையும், செயற்கை உணவுகளான துரித உணவுகளையும் (Fast Food) அடிக்கடி உண்ணக்கூடியவர்களாக இருப்பார்கள்.


மேற்கண்ட புத்தகத்தை பெற Call: 9382339084 

புத்தகத்தின் விலை ரூ 350/- 

Google pay No : 9445721793

For more Details:


1.  Website https://www.astrodevaraj.com/ 

2.  you tube channel  https://www.youtube.com/user/astrodevaraj

3. Face Book Link https://www.facebook.com/groups/stell ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக