வெள்ளி, 17 மார்ச், 2023

188 வது மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்

   


   நமது சங்க  உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். 

188 வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம்

வருகிற 25.03.2023 (சனிக்கிழமை) அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் (சென்னை , குன்றத்தூர் ) மதியம் 02.00 மணி 05.00 மணி வரை 188 வது  மாதாந்திர சார ஜோதிட கருத்தரங்கம் நடைபெற உள்ளது.


இந்த கருத்தரங்கத்திற்கு நுழைவு கட்டணம் 150/- ரூபாய் ஆகும்.  நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

( 2ம் பாவம் குறித்து கருத்தரங்கம்  நடைபெறும்) 


மற்றும் பொதுவான கேள்வி பதில்களுக்கும் நமது குருநாதர் A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.

 

சிறப்பு விருந்தினர் :"ஜோதிஷ ஆச்சார்யா " 

                        திரு.K. பாலேந்தர் , சென்னை   

                           (செயற்குழு உறுப்பினர்,  அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்)

        நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் , இந்த தகவலை நமது சங்க உறுப்பினர்களுக்கும் , நமது குரு நாதர் சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும்  Facebook,  Telegram, Whatsapp , Sms மூலமாக தெரிவிக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர் A.தேவராஜ்

PLOT No:- 13, சுப்ரமணியம் நகர்,
சிவன்தாங்கல்குன்றத்தூர் 
கைபேசி - 9382 339084

www.astrodevaraj.com.

நன்றி! வணக்கம்.  

இப்படிக்கு
ஜோதிஷ ஆச்சார்யா 

Dr. S.அண்ணாமலை PhD., (Astrology) 

 பொது செயலாளர்அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்

வியாழன், 16 மார்ச், 2023

உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) Online Zoom Class

 உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) Online Zoom Class


அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.

இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறவும், திருமண பொருத்தம் பார்க்கவும் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியின் நிறைவில் நீங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை முழு நேர தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை பெறுவீர்கள்.

கடந்த இருபது ஆண்டுகளில் 7500 மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.

பயிற்சியாளர்:-
ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.

ஆரம்ப தேதி: 14.04.2022 ( தமிழ் வழியில்) , புதன்கிழமை
பயிற்சி கட்டணம்: ரூ 7500/-

1. 50 முன் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் (ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள்) மாணவர்களுக்கு You tube தனியார் (Private ) இணைப்பு மூலம் அனுப்பப்படும்.

2. புதன் மற்றும் வார இறுதி சந்தேகங்களை தீர்க்கும் வகுப்புகள் (45 நிமிடம் - 20 வகுப்புகள்) zoom meeting மூலம் நடைபெறும்.

புதன் - இரவு 8.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை IST
சனிக்கிழமை - இரவு 8.00 மணி முதல் இரவு 8:45 மணி வரை IST
ஞாயிறு - காலை 9:00 முதல் 9:45 வரை IST

சந்தேகங்கள் தெளிவுபடுத்தும் Online வகுப்புகளும் பதிவு செய்யப்பட்டு யூ ட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் யூ டியூப் பிரைவேட் லிங்க் (Private Link) மூலம் அனுப்பப்படும்.

மாணவர்களின் சந்தேகங்கள் பின்வரும் வழிகளில் தீர்க்கப்படும்.

1. 45 நிமிடங்கள் Zoom Meeting

2. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை இந்த whatsapp குரூப்பிலும் கேட்கலாம்.

3. இந்த சந்தேகங்கள் ( whatsapp Group மூலம் கேட்க பட்ட) வரவிருக்கும் Zoom Meeting தெளிவாகும்.

முழு பயிற்சி கட்டணம் ரூ 7500 செலுத்திய பிறகு மாணவர்கள் உங்கள் Gmail ஐடியை எனது தனிப்பட்ட Whatsapp எண் 9382339084 க்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Gmail ஐடி மற்றும் முழு பயிற்சி கட்டணம் ரூ 7500 பெறப்பட்டதும்,

1. அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் . எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.

2. மாணவர்களின் Gmail ஐடியைப் பெற்ற உடன் 3 அல்லது 5 நாட்களில் அவர்களின் Whatsapp அல்லது Gmail பாடத்தின் முக்கிய குறிப்புகள் (Study Material ) அனுப்பப்படும்.

3 . எங்கள் முன் பதிவு செய்யப் பட்ட 20 வீடியோக்கள் மார்ச் 31ம் தேதி அனுப்பப்படும்., மீதமுள்ள 25 வீடியோக்கள் வகுப்பு தொடங்கிய பிறகு வாரத்திற்கு 3 முதல் 5 வீடியோக்கள் அனுப்பப்படும்.

வீடியோக்கள் you tube பிரைவேட் லிங்க் மூலம் அனுப்பப்படும்.

எங்கள் மாணவர்கள் மட்டுமே அந்த வீடியோக்களை பார்க்க முடியும். (ஆயுட்காலம் அவர்கள் பார்க்க முடியும், அது you tubeல் இருந்து நீக்கப்படாது).

எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு "தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.

Online பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ்
வழங்கப்படும்.

உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) online பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:

1.பாரம்பரிய ஜோதிட முறையை விட உயர்கணித சார ஜோதிட முறை (Advanced KP Astrology) எந்தெந்த வகையில் மேம்பட்டது, தனித்தன்மையானது, அறிவு பூர்வமானது என விளக்குதல்.

2.கே.பி. ஜோதிட கணித முறைகளை சுருக்கமாக விளக்குதல், 12 பாவ ஆரம்ப முனைகளின் தனித்தன்மையை விளக்குதல், அதாவது 12 பாவங்களின் கொடுப்பினையை பாவ ஆரம்ப முனைகள் மூலம் எப்படி அறிவது என விளக்குதல்.

3. உயர்கணித சார ஜோதிட முறையின் கோட்பாடுகள் மற்றும் விதிகள்

4. பாவதொடர்பு என்றால் என்ன? ஒவ்வொரு பாவமும் மற்ற பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை விளக்குதல். பாவமுனை உள் மற்றும் வெளி தொடர்புகள்

5. கொடுப்பினை மற்றும் தசா புத்திகளை விளக்குதல்

6. தசா, புக்திகளில் பாவமுனைத் தொடர்புகளின் (CSL) பயன்பாடுகள்

7. உயர் கணித சார ஜோதிட முறையில் பிறந்த நேரம் திருத்தம் மற்றும் ஆளும் கிரகங்கள்

8. உயர் கணித சார ஜோதிட முறையில் நிதி/பணம்

9. உயர் கணித சார ஜோதிட முறையில் உத்தியோகம் மற்றும் தொழில்

10. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமணம் பற்றின பல கோண
பகுப்பாய்வு

11. உயர் கணித சார ஜோதிட முறையில் அடிப்படை கல்வி , உயர் கல்வி

12. உயர் கணித சார ஜோதிட முறையில் மருத்துவம் ஜோதிடம்

13.உயர் கணித சார ஜோதிட முறையில் குழந்தை பிறப்பு பற்றின சார ஜோதிடம்

14. உயர் கணித சார ஜோதிட முறையில் சொத்து சேர்க்கை

15. உயர் கணித சார ஜோதிட முறையில் சம்பவம் நடைபெறும் கால நிர்ணயம் / நிகழ்வுகளின் நேரம்

16. உயர் கணித சார ஜோதிட முறையில் பங்கு சந்தை (Share Market )

17. உயர் கணித சார ஜோதிட முறையில் வெளிநாட்டு யோகம்

18. உயர் கணித சார ஜோதிட முறையில் வணிகம், கார்பரேட் வியாபாரம்

19. உயர் கணித சார ஜோதிட முறையில் பல்வேறு உதாரண ஜாதக பகுப்பாய்வு

20. உயர் கணித சார ஜோதிடத்தில் ஜாதகத்தில் கோட்சார பகுப்பாய்வு

21. உயர் கணித சார ஜோதிடத்தில் பிரசன்ன ஜோதிட நுட்பங்கள்

ஏதேனும் தெளிவு பெற எனது செல் : 9382339084 ஐ அழைக்கவும்
அல்லது எங்களது Whatsapp Group Admin திரு.ராஜசேகர் செல்: 8778590567
நன்றி
A.தேவராஜ்