ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் பற்றி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயது முதல் ஜோதிடத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பாரம்பரிய ஜோதிட முறையை நன்கு கற்று, பின்பு உயர் கணித சார ஜோதிட முறையை (Advanced KP Stellar Astrology) பிரசன்ன ஜோதிடமணி திலக் K.பாஸ்கரன், மதுரை அவர்களிடம் கற்றவர்.
சுமார் 20 வயதிலேயே ஜோதிடத்தை தொழிலாக கொண்டு, சுமார் 30 வருட ஜோதிட ஆலோசனையில் அனுபவம் பெற்றவர். தனது 31 வயதில் இருந்து யான் பெற்ற கல்வி இவ்வையகமும் பெறுக ! என்ற வகையில் உயர் கணித சார ஜோதிடத்தை கற்பிக்கும் ஆசிரியராக இருந்து, குறுகிய காலத்தில் பல ஆயிரக்கணக்கான ஜோதிடர்களை உருவாக்கி உள்ளார், அவர்களில் பலர் ஜோதிடத்தை முழு நேர தொழிலாகவும், பகுதி நேர தொழிலாகவும் கொண்டுள்ளனர்.



இன்றைய சூழலில், ஜோதிடத் துறையில் 7,500 வாடிக்கையாளர்களை பார்ப்பதே பெரிய விஷயம் என்கிற போது, இவர் 7,500 மாணவர்களை உருவாக்கியது போற்றதலுக்குரிய விஷயம் ஆகும்.



பொதுவாக YouTube தளத்தை பொறுத்த வரையில்.. இந்த 13K+ Subscribers என்பது குறைவான எண்ணிக்கையாக தெரிந்தாலும்..
வளர்ந்து வரும் KP ஜோதிடத் துறையில், அதாவது KP ஜோதிடப் பாடங்கள் சம்பந்தமான கருத்துக்களை மட்டும் பகிர்ந்து ((ராசி, நட்சத்திர பலன் சம்பந்தமான பொதுவான காணொளிகள் அல்லாது)) இந்த அளவிலான ஆதரவை பெறுவது சாதாரண விஷயம் அல்ல.

ஜோதிடத் துறையில் ""Advanced KP Stellar Astrology Software"" என்கிற USER FRIENDLY Software-ஐ தயாரித்து வெளியிட்டுள்ளார். சார ஜோதிடர்கள் மட்டுமல்லாது, பாரம்பரிய முறையை பின்பற்றும் ஜோதிடர்களும், ஏன் Browsing Center நடத்தி வரும் பல அன்பர்களும் இந்த மென்பொருளை பயன்படுத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஐயாவிடம் பயிற்சி பெற்ற பல அன்பர்கள் இன்று சிறந்த ஜோதிட ஆசிரியர்களாகவும், நூல் ஆசிரியர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.
தன்னிடம் பயின்ற மாணவர்களை ஆசிரியர்களாக உருவாக்குவதால் தான் ஐயாவை இந்த ஜோதிட உலகம் "நல்லாசிரியராக" அழைக்கிறது.
இக்கலியுகத்தில் இது போன்ற குருநாதர் கிடைப்பதே பெரும் பாக்கியம் என்றே அடியேன் கூறுவேன். 



மொத்தம்
நாட்கள்..


உபநட்சத்திர கோட்பாடு பற்றி.. (Sub lord theory) மற்றும் சார ஜோதிடத்தில் பலன் சொல்வதற்கான விதிகள் பற்றின விளக்கங்கள்.

கொடுப்பினையையும், தசாபுத்திகளையும் இணைத்து பலன் சொல்லும் முறை..
குருநாதர் அவர்களின் ஜாதக ஆய்வு, மிக மிக விரிவான அளவில்!!

முழுக்க முழுக்க ஜாதக ஆய்வு. வகுப்பில் கலந்து கொள்ளும் அன்பர்களின் ஜாதகங்களை விரிவாக ஆய்வு செய்தல்.

₹ 4,300 (மொத்தம்)
முன்பதிவு தொகையாக முதலில் ₹ 2,500 செலுத்த வேண்டும்.
பின்பு வகுப்புக்களின் போது நாள் ஒன்றுக்கு ₹ 600 செலுத்த வேண்டும்.
{ ₹2500 + ₹600 + ₹600 + ₹600 = ₹4,300 }
{{{குறிப்புகள் எடுக்க நோட்டு புத்தகம், பேனா, காலை மற்றும் மாலை இருவேளை தேநீர் மற்றும் மதிய உணவு பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும்.}}}

அருமையான
வாய்ப்பாகவும் அமையும். 
தன்னிடம் பயின்ற ஜோதிடர்களை ஒன்றிணைக்க அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் (All India Association Of Stellar Astrologers) என்ற அமைப்பை கடந்த பத்து வருடங்களுக்கு முன் நிறுவினார். இச்சங்கத்தின் மூலம் மாதந்தோறும் மாதந்திர ஜோதிட கருத்தரங்கு கூட்டங்களும், வருடந்தோறும் ஜோதிட மாநாடும் இவரது தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தனது மாணவர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் உயர் கணித சார ஜோதிடத்தை நன்கு கற்பதற்காக பத்திற்கும் மேற்பட்ட பயனுள்ள நூல்களை எளிய நடையில், விரிவாக, தெளிவாக எழுதியுள்ளார். மேலும் இவர் எழுதிய ஜோதிட நூல்கள் மூலம் இவருக்கு உருவான ஆயிரக்கணக்கான வாசகர்கள் மூலமும், இவர் உருவாக்கிய ஜோதிடர்கள் மூலமும், இளைஞரான இவருக்கு சார ஜோதிட உலகம் உரிய அங்கீகாரத்தை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைவான கட்டணத்தில் உயர் கணித சார ஜோதிட முறையில் (Stellar Astrology / KP System) ஜாதகம் கணித்து பலன் கூறுதல், திருமண பொருத்தம் பார்த்தல், அடிப்படை (பாரம்பரியம்) ஜோதிடம் மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தை நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் (Advanced KP Stellar Astrology) பயிற்சி கொடுத்தல் போன்ற பணிகளையும் செய்கிறார். ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, E-Mail மூலமாக தொடர்பு கொண்டு பலன்களை அறிந்து
கொள்ளலாம்.
For more Details:
1. Website https://www.astrodevaraj.com/
2. you tube channel https://www.youtube.com/user/astrodevaraj
3. Face Book Link https://www.facebook.com/groups/stell ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக