ஜாதகத்தில் கல்வி-கட்டுரை



புத்தகத்தின் பெயர் :ஜாதகத்தில் கல்வி 

நூல் ஆசிரியர் : ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ்

மேற்கண்ட புத்தகத்தை பெற: 9382339084 

புத்தகத்தின் விலை ரூ 250/- 

Google pay : 9445721793


                                                ஜாதகத்தில் கல்வி 

4ம் பாவமும், பகுத்தறிவும்:

பாவங்கள் இயற்கையை குறிக்கும். இயற்கை (Nature) என்பது இயல்பாக இருப்பது, இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் உயிரினங்கள் அவை இயங்கும் காலம் மற்றும் இயல்பாக இருக்கும் உலகம் அதாவது அண்டம் என்பன அனைத்தும் இயற்கையில் அடங்கும்

அண்டம் (பிரபஞ்சம்) என்பது நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு சொல்லாகும். இந்த பூமி, சந்திரன் நிலா), ஆகாயம். சூரியன், சுற்றி வருகின்ற கோள்கள், விண்மீன்கள் அவற்றின் இயக்கம் அவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்டவெளி ஆகிய அனைத்தும் அண்டம் என்ற சொல்லில் அடங்கும்.

தற்போதைய வானியல் ஆய்வுகளின் படி அண்டத்தின் வயது 13.73 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பில்லியன் என்பது 100 கோடி ஆகும். அண்டம் என்பது ஒரு கோள வடிவில் இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. ஆனால் அண்டத்தின் முழு எல்லையை நம்மால் இதுவரை கணிக்க இயலவில்லை.

தொலைதூரத்தில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள், கதிர்வீச்சுகள் போன்றவற்றை வைத்துக் கொண்டு நம்மால் அறிந்து கொள்ள முடிந்த அண்டத்தின் பகுதியே"நாம் அறிந்த அண்டம்" (Observeble Universe) என்று சொல்லப்படுகின்றது.

அதாவதுஇந்த அண்டம் (பிரபஞ்சம்) என்பது பிரமிக்க வைப்பதாகவும், தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டு கொண்டே இருப்பதாகவும் உள்ளது.

ஜோதிடத்தில் 5-ம் பாவம் என்பது பிரமிப்பையும் வியப்பினையும் குறிக்கும். 5-ம் பாவத்தில் உள்ள கலை என்ற காரகத்தினை வாசகர்கள் கவனிக்கவும். ஒரு செயல் அதை காண்பவர்களுக்கு ஆச்சரியப்படும் வண்ணம் அமைவதையே கலை என்கின்றோம்.

அதாவது மகிழ்ச்சி அல்லது பிரமிப்பு தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக, அல்லது எதிர்பாராமல் செயல் ஒன்று நடந்து விடும் போது, இது எப்படி? நம்மால் முடியாதே என்று ஒருவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் உணர்வு தான் கலாரசனை என்பதாகும்.

அந்த வகையில் இயற்கையின் பிரம்மாண்டம் என்பது பிரமிப்பாகவும், ஆச்சரியப்படும் வகையிலும் உள்ளதால் 5-ம் பாவம் என்பது இயற்கையை குறிக்கும் பாவ காரகமாக உள்ளது. அதேபோல் 9ம் பாவம் என்பது ஆராய்ச்சியை குறிக்கும். ஆராய்ச்சி என்பது ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் சோதனையை குறிப்பதாகும்.

அந்த வகையில் இந்த அண்டத்தை அல்லது இயற்கையை குறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அது என்றைக்கும் முழுமையடையாத ஒரு தொடர் கதை என்பதே உண்மை.

9-ம் பாவம் என்பது இறைசக்தி அல்லது தெய்வத்தை குறிக்கும் பாவம் ஆகும். இயற்கை என்ற பிரமாண்டத்தை (பிரபஞ்சத்தை) இறைசக்தி என்ற ஒரு பேராற்றாலால் மட்டுமே


மேலும் 9-ம் பாவம் என்பது முன் அறிவை அதாவது வருவதை முன்கூட்டியே அறியும் அறிவைக் குறிக்கும். இதைதான் உள்ளுணர்வு என்று கூறுகிறோம் உள்ளுணர்வு (Intuition) என்பது காரணம் தெரியாவிட்டாலும் ஒரு நிகழ்ச்சி நடக்க போவதை மனமானது. தானே உணரும் திறன் என்பதாகும்.

அதாவது இந்த உலகம் தோன்றும் போதே அதில் வாழப் போகும் உயிரினங்களுக்கு என்ன என்ன தேவையோ அவற்றை ஏற்கெனவே படைத்திருப்பது அல்லது படைக்க தூண்டுவது இறைபக்தியின் முன்னறிவாகும்.

9-ம் பாவம் என்பது நேர்மை, நம்பிக்கை, நாணயம் போன்றவற்றை குறிக்கும். மேலும் கடவுள் என்பதும் ஒரு வித நபிக்கையே கடவுள் என்பவர் இந்த அண்டம் முழுவதும் படைத்து காப்பவர் என்றும், அவர் சகலவிதமான சக்திகளையும் (Omnipotent) தன்னுள் பெற்றிருப்பவர் என்றும், மேலும் கடவுள் என்பவர் இறப்பு பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்பவன் அதனால் தான் கடன் என்ற பெயர் என்பதை நாம் அறிவோம்.

 

அன்பு, பண்பு, புனிதம், கருணை போன்ற உணர்வு பூர்வமான விஷயங்களின் மறுபெயரைதான் கடவுள் என்றும் நாம் கூறுவதுண்டு எனவே கடவுள் என்பது 100% நல்ல சக்தி என்பதில் நாத்திகர்களுக்கும் மாற்றுகருத்து இருக்காது.

 

திரிகோண பாவங்கள் ஒரே தன்மை வாய்ந்தவை என்பதால் லக்னத்தின் திரிகோண பாவங்கள் 5-ம் பாவத்தின் காரகங்கள், 9-ம் பாவத்தின் காரகங்கள் லக்ன பாவத்தில் காரகங்களும் கிட்டத் தட் ஒரே மாதிரியான காரகங்களை கொண்டிருக்கும். லக்னம் என்பது உயிரினை குறிக்கும் பாவ காரகமாகும்

 

மேற்கண்ட 5.9-ம் பாவங்கள் லக்னம் என்ற உயிருக்கு சாதகமான திரிகோண பாவங்கள் என்பதால், உயிருள்ள பொருட்கள் உயிரினங்கள் அனைத்தும் இயற்கை தன்மை உள்ளதாகும். அதாவது இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினத்திலும் இறைபக்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.

ஜோதிடத்தில் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு, அந்த பாவத்தில் இருந்து வரும் 8,12-ம் பாவங்கள் தீமையை தரும் என்பதை நாமறிவோம். இதில் 12-ம் பாவம் என்பது குறிப்பிட்ட பாவத்தை

முழுவதுமாக மறைக்கும் அல்லது துண்டிக்கும் அல்லது செயலிழக்க வைக்கும் பாவமாக கருதப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 8-ம் பாவம் என்பது, அந்த பாவ காரகங்களுக்கு எதிர்மறையாக செயல்படும் பாவம் ஆகும். அதாவது மேற்கண்ட பாவ காரகங்கள் ஈடுபட்டு அதற்கு எதிரான நிலையில் செயல்படுவதை குறிக்கும்.

 

அந்தவகையில் 5,9-ம் பாவங்களுக்கு 12,8-ம் பாவம் 4-ம் பாவம் அமையும். 5,9-ம் பாவங்கள் இயற்கையை குறிக்கும் என இதுவரை பார்த்தோம். எனவே இயற்கை களுக்கு எதிரான செயற்கையை, 4ம் பாவம் குறிக்கும், மனிதர்களால் உருவாக்கப்படும் எல்லா பொருட்களும் செயற்கையாகும்.

இயல்பாக இருப்பது இயற்கை என்றால், இயல்பினை மாற்றுவது செயற்கை ஆகும். காடு என்பது இயற்கை. நகரம் என்பது செயற்கை.

ஆறு என்பது இயற்கை. அணை (Dam) என்பது செயற்கை .

 

அதாவது மனிதர்களால் உருவாக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் அல்லது முறைப்படுத்தப்படும் விஷயங்களை 4ம் பாவம் குறிக்கும்.

 

குறிப்பாக செய்த லீலைகளை திரும்பதிரும்ப செய்வதையும், ஒரே இடத்தை நோக்கி கூர்ந்து கவனத்தை செலுத்துவதையும் ஒன்றினை உருவாக்கி, அதிலிருந்து வேறொன்றை உருவாக்கியது (கட்டுமானம்) யும் (Assembling or Construction) 4-ம் பாவம் குறிக்கும்.

 

ஒருவர் ஒரு செயலை திரும்ப திரும்ப செய்தால் அவர் அந்த செயலில் சிறந்த பயிற்சியினை பெறுகின்றார் என்றால் அது மிகையல்ல. அதாவது வேலை, விளையாட்டு, கலை முதலியவற்றில் திறமையாக செயல்படுவதற்கு தேவையான செய்முறைகளை (Practical), அடிக்கடி செய்து பழக்கப்படுத்தி கொள்வதை தான் நாம் பயிற்சி என்கின்றோம்.


புத்தகத்தின் பெயர் :ஜாதகத்தில் கல்வி 

நூல் ஆசிரியர் : ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ்

மேற்கண்ட புத்தகத்தை பெற: 9382339084 

புத்தகத்தின் விலை ரூ 250/- 

Google pay : 9445721793



For more Details:


1.  Website https://www.astrodevaraj.com/ 

2.  you tube channel  https://www.youtube.com/user/astrodevaraj

3. Face Book Link https://www.facebook.com/groups/stell ...


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக