கட்டுரைகள் (தொழில்)


புத்தகத்தின் பெயர்: ஜாதகமும் தொழில் அமைப்பும் 

நூல் ஆசிரியர் : ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ்

மேற்கண்ட புத்தகத்தை பெற Call: 9382339084 

புத்தகத்தின் விலை ரூ 200/- 

Google pay No : 9445721793


10ம் பாவமும் தொழில் அமைப்பும்


    உத்யோகம் ( தொழில் ) " புருஷ லட்சணம் " என்பது பழமொழி .
ஒருவருக்கு கிடைக்கும் அந்தஸ்து , புகழ் , அங்கீகாரம் , மதிப்பு , மரியாதை
போன்றவை அவர் செய்யும் தொழிலைக் கொண்டே அளவிடப்படுகின்றது .

    12 பாவங்களில் அகச்சார்புடைய பாவங்கள் என்னும் ஒற்றைப்படை
பாவங்களான 1 , 3 , 5 , 7 , 9 , 11ம் பாவங்கள் ஒரு அணியாகவும் ;
புறச்சார்புடையப் பாவங்கள் என்னும் இரட்டை படை பாவங்களான 2 , 4 , 6 ,
மாணாக்கர்களுக்கு 8 , 10 , 12 ம் பாவங்கள் ஒரு அணியாகவும் உள்ளதை எமது முந்தைய
நூல்களை படித்த வாசகர்களுக்கு நன்கு தெரியும் .

    ஒற்றை படை பாவங்கள் லக்னம் என்ற ஜாதகரின் தனிப்பட்ட
வாழ்க்கையை ( Personal life ) மேம்படுத்தக்கூடிய அகம்சார்ந்த
( மனவியல் ) காரகங்களையும் ; இரட்டைப்படை பாவங்கள் ஜாதகர் இந்த
சமுதாயத்திற்காக அல்லது மற்றவர்களை கருத்தில் கொண்டு வாழும்
வாழ்க்கை ( Official life ) பொருளியல் சார்ந்த ( புறம் ) காரகங்களையும்
கொண்டுள்ளது .

அதாவது , ஜாதகர் என்ற லக்ன பாவத்தை முன்னிறுத்தி ஒற்றை
படை பாவங்களும் , பொருள் என்ற இரண்டாம் பாவத்தை முன்னிறுத்தி
இரட்டை படை பாவங்களும் செயல்படுகின்றன என்பதை அன்பர்கள்
கவனிக்கவும் .

ஒரு குறிப்பிட்ட பாவத்தின் பரிணாமம் ( அடுத்த வளர்ச்சி ) என்பது அந்த பாவத்தின் 3ம் பாவம் என்று எமது முந்தைய நூல்களில் குறிப்பிட்டதை இங்கு மீண்டும் வாசகர்களுக்கு நினைவுக்கூற விரும்புகின்றேன்.

லக்ன பாவத்தின் பரிணாம பாவங்களாக ஒற்றைப் படை பாவங்களும் இரண்டாம் பாவத்தின் பரிணாம பாவங்களாக இரட்டை படை பாவங்களும் உள்ளன .

ஒரு ஜாதகத்தில் உள்ள 12பாவங்களில் மிக முக்கியமான பாவங்கள் என்பது லக்ன பாவமும் , 2ம் பாவமும் ஆகும் . லக்ன பாவத்தையும் , 2ம் பாவத்தையும் கருத்தில் கொண்டே ( அகம் , புறம் என்று மற்ற பாவங்கள் இயங்குகின்றது.

லக்னத்திற்கு அல்லது குறிப்பிட்ட பாவத்திற்கு , அந்த பாவத்திலிருந்து கொண்டிருக்கும்

வரும் 9ம் பாவம் , என்பது லக்னம் என்ற ஜாதகருக்கு அதிர்ஷ்டம் , பாக்யம் போன்றவற்றைத் தெய்வமே தரும் ( இயற்கை அமைத்து தரும் சூழல் ) பாக்யஸ்தானம் என்பதை வாசகர்கள் அறிவீர்கள் .

அதே போல் 2ம் பாவத்திற்கு 9ம் பாவமான 10ம் பாவம் , 2ம்
பாவத்திற்கு பாக்ய அல்லது அதிர்ஷ்ட ஸ்தானமாகின்றது . ஒரு குறிப்பிட்ட
பாவத்திற்கு 9ம் பாவம் என்பது அந்த குறிப்பிட்ட பாவத்தினை எந்த வித
சிரமமும் இல்லாமல் இறையருளால் ஜாதகர் அனுபவிப்பதை செய்யும் .

அதாவது ஒருவருக்கு நிரந்தரமாக தொழில் ஏதேனும் சிறப்பாக இருந்தாலே ( 10ம் பாவம் ) , அவரின் வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்திற்கு ( 2ம் பாவம் ) ஒரு உத்திரவாதம் கிடைக்கும் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன் . அதாவது ஒரு குறிப்பிட்ட பாவத்தின் அல்லது ஆய்வுக்குரிய பாவத்தின் 9ம் பாவம் செயல்படும் போது ஆய்வுக்குரிய பாவத்திற்கு இறையருளால் எவ்வித சிரமமும் இருக்காது . 9ம் பாவம் என்பது தெய்வ அனுகிரகம் என்ற காரகத்தை வைத்துள்ளதால் , அதாவது தெய்வமே ஆய்வுக்குரிய பாவத்தின் காரகங்களை தருவதால் ஜாதகர் அதை சிறப்பாக எந்தவித சிரமமும் இல்லாமல் அனுபவிப்பார் .

அந்த வகையில் 10ம் பாவம் என்னும் தொழில் ஸ்தானம்
வலுப்பெற்ற ஜாதகத்தில் , 2ம் பாவம் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட தொழில்
விரும்புகின்றேன் . மூலம் ஜாதகருக்குப் பொருளாதாரம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

ஒருவருக்கு தனம் என்ற பொருளாதாரம் வரும் வழிகள் பல
இருந்தாலும் , தனத்தைத் தொழில் மூலம் ஜாதகர் சுயமாக சம்பாதித்து
ஈட்டுவதே ( பூர்வீக சொத்துகள் மூலம் என்று இல்லாமல் ) ஜாதகருக்கு
அந்தஸ்தினையும் , மதிப்பினையும் , கௌரவத்தினையும் தரும் .

தொழில் ஸ்தானம் என்னும் 10ம் பாவம் என்பது , தனஸ்தானம்
என்னும் 2ம் பாவத்திற்கு 9ம் பாவம் என்பதால் ( 9ம் பாவம் , நேர்மை ,
தர்மம் , போன்றவற்றை குறிக்கும் ) தொழில் மூலம் கிடைத்து
பணமே நிலைத்து நிற்கும் .

10ம் பாவம் என்பது , கர்ம திரிகோணமான 2 , 6 , 10ம்
பாவங்களில் மிக வலிமையான பாவம் ஆகும் . அதாவது திரிகோண
பாவங்கள் ஒன்றை விட ஒன்று வலிமையானது என்பதை நாம்
அறிவோம் . கர்மம் என்றால் கடமை , செயல்பாடுகள் என்று பொருள்
கொள்ளப்படுகின்றது . கர்மா என்றால் முன் ஜென்மத்தில்
உறுதி நிர்ணயிக்கப்பட்டது அல்லது முன்ஜென்ம வினை பயன் என்றும்
பொருள் கொள்ளப்படுகின்றது .

 கர்ம ஸ்தானமான 2 , 6 , 10ம் பாவங்களை பொருள் பாவங்கள்
 என்றும் அழைக்கின்றோம் . ஒருவர் பொருளை ஈட்ட வேண்டுமென்றால்
ஏதாவது ஒரு செயலை ( வேலையை ) செய்ய வேண்டும் . ஒருவர்
செய்யும் வேலையை ஒரு கடமையாக ( பொறுப்பாக ) செய்ய வேண்டும்
என்பதற்காக தான் 2 , 6 , 10 என்ற பொருட்சார்ந்த திரிகோண
பாவங்களை கர்ம திரிகோண பாவங்கள் என அழைக்கின்றோம் .

பொதுவாக 10ம் பாவம் என்பது ஜோதிடத்தில் ொழிலை பற்றி
தெரிவிக்க முக்கியமாக பயன்படுகின்றது . 10ம் பாவத்திற்கு திரிகோணமான
-  2 , 6ம் பாவங்களில் , 2ம் பாவம் தனநிலையையும் , 6ம்பாவம் ஒருவரிடத்தில் பணிபுரிதல் மற்றும் உடல் உழைப்பையும் தெரிவிக்கும் . அதனால் தான் நம் முன்னோர்கள் 2 , 6 10ம் பாவங்களை கர்ம ஸ்தானம் என்று அழைத்தனர் .@

கர்மம் என்பது நமக்கு விதி என்ன செயலை நிர்ணயம் செய்ததோ அதனை செய்வது , அந்த பணியை ( 6ம் பாவம் ) மற்றவர்களுக்கு நாம் செய்யும் போது நம் குடும்பத்தை காப்பாற்ற பொருள் ( 2ம் பாவம் ) கிடைக்கின்றது . அதாவது திரிகோண  பாவங்களான 2 , 6 , 10ம் பாவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதற்காகவே இந்த விளக்கம்.

நம் முன்னோர்கள் , ஜாதகத்தில் அக வாழ்க்கைக்குத் திரிகோண ஸ்தானங்களான 1 , 5 , 9ம் வீடுகளையும் , புறவாழ்க்கைக்குக் கேந்திர ஸ்தானங்களான 1 , 4 , 7 , 10ம் வீடுகளையும் தந்துள்ளனர் .

அக வாழ்கை என்பது முழுக்க முழுக்க லக்னம் என்ற ஜாதகரின் உடல் , மனம் , ஆசைகள் போன்ற உணர்வு பூர்வமான விஷயங்களை சார்ந்தது என்பதால் லக்னத்திற்கு மிகவும் சாதகமான வீடுகள் என்று நம் முன்னோர்கள் 1 , 5 , 9ம் வீடுகளை உயர்த்தி கூறினார்கள் .

மேற்கண்ட 5 , 9ம் பாவங்கள் என்பது கர்ம ஸ்தானமான 10ம் பாவத்திற்கு 8 , 12ம் பாவங்களாக அமைவதை வாசகர்கள் கவனிக்கவும் .

அதாவது ஒரு மனிதன் அதிக அளவில் தன்னை உணர்வு பூர்வமான விஷயங்களில் ( கேளிக்கை , சிற்றின்பம் ) ஈடுபடுத்திகொண்டால் அவனால் தன் கடமை அல்லது பொறுப்புகளைச் ( 10ம் பாவம் ) சரியாக கவனிக்க முடியாது .

புறவாழ்க்கை என்பது லக்னம் என்ற ஜாதகர் தன்னுடைய மனம் உடல் , ஆசைகள் போன்ற உணர்வு பூர்வமானவற்றை சாராமல் பொருள் ஈட்டும் பொருட்டு மற்றவர்களுக்காக அல்லது ஜாதகர் சமூகத்தில் சந்திக்கும் நபர்களுக்காக ( 7ம்பாவம் ) வாழும் வாழ்க்கை ஆகும் . அதாவது புறவாழ்க்கை என்பது லக்னம் என்ற ஜாதகர் தன் வீட்டிற்கு வெளியே வாழும் வாழ்க்கை .

எனவே லக்னத்திற்கும் , 7ம் வீட்டிற்கும் 8 , 12 ம் பாவங்களை
கொண்டிருக்காத 1 , 4 , 7 , 10ம் பாவங்களை கேந்திரங்கள் என்று நம்
முன்னோர்கள் சிறப்பித்து கூறினார்கள் .

புறவாழ்க்கை என்பதே தொழிலை சார்ந்த வாழ்க்கை என்பதை
கருத்தில் கொண்டே 1 , 7ம் பாவங்களுக்கு ( ஜாதகர் மற்றும் ஜாதகரை
சந்திக்கும் நபர் 10ம் பாவமான , 4 , 10ம் பாவங்களையும் சேர்த்து 1 , 4 , 7 ,
10ம் பாவங்களை கேந்திரம் என்று அழைக்கப்படுகின்றது .

ஒரு குறிப்பிட்ட பாவமும் , அதன் 7ம் பாவமும் சேர்ந்து இருப்பதை
சமசப்தம பாவங்கள் என்கிறோம் . ( 1 , 7 ; 2 , 8 ; 3 , 9 ; 4 , 10 ; 5 , 11 ) .
 போன்றவை சமசப்தம பாவங்களாகும் . இந்த சப்தம பாவங்கள் இரண்டு
பாவங்களாக இருந்தாலும் இதை ஒரே பாவமாக ( ஜோழ் கருத வேண்டும் .


சம சப்தம பாவங்கள் லக்னத்திற்கு என்ன விளைவினை தருமோ ,
அதே விளைவினை தான் 7ம் பாவத்திற்கும் தரும் . அந்த வகையில் 4 ,
10ம் பாவங்கள் ஒருவருக்கொருவர் தொழில் ரீதியில் நஷ்டப்படாமல்
வர்த்தகம் செய்து கொள்வதைக் குறிக்கும் .


ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 7ம் பாவம் என்பது பகிர்ந்து
கொள்ளுதல் , சமமாக பிரித்தல் , வெளிப்படையாக நடந்து கொள்ளுதல் ,
சமூகத்தை சார்ந்து இருத்தல் போன்றவற்றைக் குறிக்கும் .


எனவே தான் லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களான 1 , 4 , 7 , 10ம்
வீடுகள் , 7ம் வீட்டிற்கும் கேந்திர ஸ்தானங்களாக உள்ளது . மேலும்
 லக்னத்தின் கேந்திர ஸ்தானங்களான 4 , 7 , 10ம் பாவங்கள் ,
லக்னத்திற்கோ அல்லது லக்னத்தின் 2ம் பாவத்திற்கோ 8 , 12ம் வீடுகளை
 வைத்திருக்கவில்லை .


அதே போல் 7ம் வீட்டின் கேந்திர ஸ்தானங்ளான 10 , 1 , 4ம் வீடுகள் ,
7ம் வீட்டிற்கோ , 7ம் வீட்டின் 2ம் வீட்டிற்கோ 8 , 12ம் வீடுகளை
வைத்திருக்கவில்லை .

திரிகோணங்கள் ஒன்றை விட ஒன்று வலிமையானது என்பது போல் கேந்திரங்களும் ஒன்றைவிட ஒன்று வலிமை வாய்ந்தது .

எனவே கேந்திரங்களில் வலிமையானது 10ம் பாவம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

மேலும் லக்னத்தின் திரிகோண பாவங்களான 1 , 5 , 9ம் பாவங்கள் அகவாழ்க்கைக்கு மிகவும் சாதகமான பாவங்கள் என்றாலும் , புற வாழ்க்கைக்கு மிகவும் பாதகமான பாவங்கள் என்பதைச் சற்று முன் பார்த்தோம் .

அதிலும் 9ம் பாவம் என்பது புறவாழ்க்கைக்கு தொழிலுக்கு 100 % தீமையை தரும் . இதுலக்னத்தின் திரிகோணங்களில் மிகவலிமையானது என்பது குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக கேந்திர ஸ்தானங்களில் மிக வலிமையான பாவமான 10ம் பாவம் லக்னத்தின் குறிப்பாக அகச் சார்புடைய காரகங்களை 70 % செயல்படுத்தும் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன் .

குறிப்பு : -

ஒரு குறிப்பிட்ட பாவத்தின் 10ம் பாவம் அந்த குறிப்பிட்ட பாவத்தின் காரகங்களை 70 % வரை செயல்படுத்தும் . எனவே தான் ஒருவரின்  வாழ்க்கையில் தொழில் என்பது கிட்டதட்ட அவரின் வாழ்நாளில் 70 % முக்கிய பங்கினை வகிக்கின்றது . “

மேலும் பாவக் கணித கணக்கீட்டில் 10ம் பாவம் ஒரு முக்கியமான பாவமாகும் . இந்த பாவம் ஜாதகத்தின் உச்சி அல்லது சிகரம் என்று அழைக்கப்படுகின்றதுஇனி 10ம் பாவத்தின் காரகங்களை தொகுத்து கூறினால் அது பின்வருமாறு அமையும் .


நிலையான வேலை , ஜாதகரின் வாழ்க்கைக்கு ஆதாரமான ஜீவனம் ,
 கர்மம் , கடமை , மதிப்பு , ஆட்சி , அதிகாரம் , உயர் பதவி , பதவி உயர்வு ,
முதன்மையான பதவி , பொறுப்பான பதவி , பெயர் , கௌரவம் , மரியாதை ,
நற்செயல்களால் ஜாதகருக்கு கிடைக்கும் புகழ் , அந்தஸ்து , பொறுப்புகள் ,
தாய் தந்தையர்க்கு செய்யும் இறுதி சடங்கு , போன்ற காரகங்களையும் ,

 
அரசாங்க விருது , உத்யோகத்தில் தலைமை பொறுப்பு , ஜாதகர்
செய்யும் செயல்களினால் அவருக்கு கிடைக்கும் அந்தஸ்து , புறசார்புடைய
அனைத்து காரியத்திலும் வெற்றி , அரசாங்க ஆதரவு , நிர்வாகத்திறன் ,
தொழிலில் முன்னோடியாக இருப்பவர்கள் , தொழிலில் சாதனையாளர்கள் ,
தொழிலில் அடையாளக் குறியீடை ( Trade mark ) கொண்டவர்கள்
10ம் போன்ற காரகங்களையும் ,


நட்பு வட்டாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் , குழுவிற்கு
வாழ்க்கைக்கு அதிக தீமைகளை தராத பாவங்களாக உள்ளது . தலைமைத் தாங்குதல் , எந்த செயலையும் திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் , தொழிலில் உள்ள தொலைநோக்கு பார்வை , உயர்ந்த இடத்தில்  பணிபுரிதல் , தொழிலில் சாதனைப் புரிதல் , எளிதில் திருப்தியடையாத  குணம் போன்றக் காரகங்களையும் ,


| ஆசைகளை அடக்கி வைக்கும் சுயக்கட்டுப்பாடு , ஒருவருடைய முதல்
தொழில் , பிரபலமான தொழிலதிபர் என பெயரெடுத்தல் கடைசிவரை
சொத்துகளைக் காப்பாற்றும் திறன் ( விற்காமல் ) , எப்போதும் ஒரு
பொருளை உற்பத்தி செய்து கொண்டிருத்தல் , போன்ற காரகங்களையும்
10ம் பாவம் கொண்டிருக்கின்றன .


மேற்கண்டவற்றை சுருக்கமாகக் கூறினால் தனக்கு
ஒப்படைக்கப்பட்டிருந்த செயலைக் கவனத்துடனும் , அக்கறையுடனும்
செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வினை ( பொறுப்பினை ) 10ம் பாவம்
குறிக்கும் . மேலும் ஜாதகர் வகிக்கும் பதவியால் , அவரே சுயமாக முடிவுகளை
எடுப்பதற்கும் , அதைச் செயல்படுத்துவதற்கும் ஆணைப் பிறப்பிப்பதற்குமான
உரிமை அல்லது சக்தியையும் ( அதிகாரம் ) 10ம் பாவம் குறிப்பிடும் .

உயர்கணித சார ஜோதிட முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்ட ஒரு ஜாதகத்தில் 10ம் பாவ ஆரம்பமுனையைக் கொண்டு , ஜாதகரின்  தொழிலுக்கான கொடுப்பினையை தெரிந்துக்கொள்ள முடியும் . அதாவது தொழிலை ஜாதகர் பொறுப்புடன் ( கடமையுடன் ) செய்வாரா அல்லது தொழிலில் ஏனோ தனோ என்று இருப்பாரா என தெரிந்து கொள்ள முடியும் .

 

அதாவது ஒரு பாவத்தின் ஆரம்ப பாகை அல்லது ஆரம்ப முனை எதுவோ , அந்த பாகையிலிருந்து தான் அந்த பாவம் ஆரம்பிக்கின்றது . ஒரு சம்பவம் எப்பொழுது ஆரம்பிக்கப்படுகின்றதோ அப்பொழுதே அந்த சம்பவத்தின் அனைத்து விஷயங்களும் தீர்மானிக்கப்படுகின்றது என்பதே  ஜோதிஷ சாஸ்திரத்தின் முக்கிய விதி ஆகும் .

10ம் பாவ ஆரம்ப முனை என்பது அந்த பாவத்தின் பாவ அதிபதி , அந்த பாவத்தின் நட்சத்திர அதிபதி , அந்த பாவத்தின் உப நட்சத்திர மற்றும் அந்த பாவத்தின் உப உப அதிபதி என்று குறுகிக் கொண்டே நட்சத்திர அதிபதி

இதில் பாவ அதிபதியை விட பாவ நட்சத்திர அதிபதி அந்த பாவத்தின் உபநட்சத்திர அதிபதி  வலிமையானவர் . பாவ நட்சத்திர அதிபதியை விட பாவ உப நட்சத்திர அதிபதி வலிமையானவர் . ஆனால் பாவ உபநட்சத்திர அதிபதியை விட  பாவ உப உபநட்சத்திர அதிபதி வலிமை குறைந்தவர் .

 

அதே நேரத்தில் பாவ நட்சத்திர அதிபதியை விட பாவ உப உப நட்சத்திர  அதிபதி வலிமையானவர் . அதன்படி ஒரு குறிப்பிட்ட பாவத்தின்  கொடுப்பினையை நிர்ணயிக்கும் வலிமை ,

அந்தப் பாவத்தின் உபநட்சத்திர அதிபதிக்கு 60 % பங்கும் , அந்தப் பாவத்தின் உப உப நட்சத்திர அதிபதிக்கு 25 % பங்கும் , அந்த பாவ நட்சத்திர அதிபதிக்கு 15 % பங்கும் இருக்கலாம் என்பது அடியேனின் கருத்து .( ஜோதிட அறிஞர்கள் இதனை ஆய்வு செய்ய வேண்டுகின்றேன் )

 

 

எனவே ஒரு பாவத்தின் கொடுப்பினையை முழுவதுமாக அறிந்து கொள்ள அந்த பாவத்தின் நட்சத்திர அதிபதி , உபநட்சத்திர அதிபதி , உப உப  நட்சத்திர அதிபதி ஆகிய 3 கிரகங்களையும் ஆய்வு செய்வதால் மட்டுமே

 

அந்தப் பாவத்தின் கொடுப்பினையை 100 % சரியாகச் செய்ய முடியும் .


அதே நேரத்தில் , மேற்கண்ட இந்த 3 கிரகங்களும் அந்த பாவத்திற்கு ஒரே மாதிரியான பலனைத் தர பெரும்பாலும் வாய்ப்பு  குறைவு , அதாவது , அந்த பாவத்தின் நட்சத்திர அதிபதி , உப உப நட்சத்திர
 அதிபதியாக உள்ள 2 கிரகங்களும் அந்தப் பாவத்திற்கு , பாதகமான பலனைத் தரும் நிலையில் உள்ளதாகக் கொள்வோம் .

ஆனால் , அந்த பாவத்தின் உப நட்சத்திர அதிபதி , அந்த பாவத்திற்கு மிகவும் சாதகமானப் பலனைத் தரும் நிலையில் இருந்தால் அந்தப் பாவத்திற்கு 60 % சாதகமான பலனும் , 40 % ( 15 + 25 ) பாதகமானப் பலனும்  நடைபெறும் என்றாலும் கூட , இங்கு சாதகமானப் பலனையே அந்த  பாவம் மூலம் , ஜாதகர் வாழ்வில் பெரும்பகுதி அனுபவிக்க முடியும் .

 ஒரு வேளை அந்தப் பாவத்தின் நட்சத்திர அதிபதி அந்தப்  அதிபதி பாவத்திற்குச் சாதக நிலையில் இருப்பதாகவும் , அந்தப் பாவத்தின் உபஉப  அந்த பாவத்திற்கு பாதக நிலையில் இருப்பதாகவும்
செல்லும் . வைத்துக் கொள்வோம் .


அந்த பாவத்திற்கு சாதக  நிலையில் இருந்தால் ஜாதகர் அந்தப் பாவ பலனை 75 % சாதகமாகவும் ,
25 % பாதகமாகவும் வாழ்நாளில் அனுபவிப்பார் .

 புள்ளியியல் நோக்கில் பார்க்கும் போது ஒரு பாவத்தின் நட்சத்திர  அதிபதி , உப உப நட்சத்திர அதிபதி ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான நிலையில் இருப்பதற்கு வாய்ப்பு சற்று குறைவு ,  

அதாவது 2 கிரகங்களும் அந்த பாவத்திற்கு சாதகமாக அல்லது பாதகமாக இருப்பதற்கு வாய்ப்பு சற்று குறைவு .


எனவே 10ம் பாவ ஆரம்பமுனையில் ( மற்ற 11 பாவ  முனைகளுக்கும் மேற்கண்ட விதி பொருந்தும் , அதன் பாவ உப நட்சத்திர  அதிபதியே வலிமையானவர் . 10ம் பாவ விதியின் கொடுப்பினையை  நிர்ணயிக்கும் ஆற்றல் 10ம் பாவ உபநட்சத்திரத்திற்கே அதிகளவில் உண்டு  என்று கூறி , இந்த கட்டுரையை முடிக்கிறேன் .

 

 

2 . 10ம் பாவத்தின் மற்ற  பாவத் தொடர்புகள்

ஒரு பாவத்தின் ஆரம்ப பாகை அல்லது ஆரம்ப முனை எதுவோ , அந்த பாகையிலிருந்து தான் அந்த பாவம் ஆரம்பிக்கின்றது . ஒரு சம்பவம் எப்பொழுது ஆரம்பிக்கப்படுகின்றதோ அப்பொழுதே அந்த சம்பவத்தின் அனைத்து விஷயங்களும் தீர்மானிக்கப்படுகின்றது .


10ம் பாவ முனை என்பது 10ம் பாவ முனையின் நட்சத்திர அதிபதி ,  10ம் பாவ முனையின் உபநட்சத்திர அதிபதி . 10ம் பாவ முனையின் உப  உப நட்சத்திர அதிபதி போன்ற 3 கிரகங்களையும் குறிப்பதாகும் .

மேற்கண்ட கிரகங்களில் , 10ம் பாவ முனையின் உபநட்சத்திர அதிபதியே வலிமையானவர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் .

10ம் பாவ முனையின் உபநட்சத்திர அதிபதி , தான் நின்ற  நட்சத்திரம் , உபநட்சத்திரம் மூலம் மற்ற பாவமுனைகளைத் தொடர்பு  கொண்டாலோ அல்லது 10ம் பாவ முனையின் உபநட்சத்திரமே , வேறு சில  பாவமுனைகளுக்கும் உபநட்சத்திரமாக அமைந்தாலோ மேற்கண்ட பாவங்களை 10ம் பாவம் தொடர்பு கொண்டுள்ளது என்று பொருள் கொள்ளவும் .

 

உதாரணமாக 7ம் பாவ உபநட்சத்திரமும் , 10ம் பாவ  உபநட்சத்திரமும் ஒரே கிரகம் எனில் 10ம் பாவம் , 7ம் பாவத்துடன் , தொடர்பு  கொண்டுள்ளது எனவும் , 7ம் பாவம் , 10ம் பாவத்துடன் தொடர்பு
கொண்டுள்ளது எனவும் வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன் .

 ஒரு குறிப்பிட்ட பாவம் ( இங்கு 10ம் பாவம் ) , மற்ற பாவங்களைத்  தொடர்பு கொள்ளும் போது தன்னுடைய பாவ காரகங்களின் வழியாக  தொடர்பு கொண்ட பாவங்களின் காரகங்களைச் செயல்படுத்தும் .


அப்படி செயல்படுத்தும் போது தன்னுடைய பாவத்தை ( இங்கு 10ம் பாவம் )  வளர்த்து கொண்டோ அல்லது தன்னுடைய பாவத்தைக் கெடுத்து  கொண்டோதொடர்புகொண்ட பாவத்தின் காரகங்களைச் செயல்படுத்தும் .


அதாவது ஒரு குறிப்பிட்ட பாவம் , மற்ற பாவங்களைத் தொடர்பு  கொள்ளும் போது தன்னுடைய பாவத்திற்கு , தான் தொடர்பு கொண்ட  பாவங்கள் சாதகமான நிலையில் இருந்தால் ( தான் எந்த அணியோ அதே
அணியில் தொடர்பு கொண்ட பாவங்கள் இருந்தால் ) தன்னுடைய  பாவப்பலனைத் தக்கவைத்து , தொடர்பு கொண்ட பாவங்களையும் செயல்படுத்தும் .


ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட பாவம் , மற்ற பாவங்களைத் தொடர்பு  கொள்ளும் போது தன்னுடைய பாவத்திற்குத் தான் தொடர்பு கொண்ட  பாவங்கள் பாதகமான நிலையில் இருந்தால் ( தான் எந்த அணியோ
அதற்கு எதிர் அணியில் குறிப்பாக தன்னுடைய பாவத் திற்கு 4 , 8 , 12ம்   பாவங்களாக தொடர்பு கொண்ட பாவங்கள் இருந்தால் ) தன்னுடைய  பாவப்பலனைக் கெடுத்து கொண்டு , தொடர்பு கொண்ட பாவங்களைச்
செயல்படுத்தும் .


அதன்படி 10ம் முனையின் உபநட்சத்திரம் ( அல்லது நட்சத்திரம் ,  உப உப நட்சத்திரம் ) பின்வரும் பாவங்களைத் தொடர்பு கொள்ளும் போது   ஏற்படும் விளைவுகள் 10ம் பாவத்தின் விதி அல்லது கொடுப்பினையாக   அமையும் . விதி அல்லது கொடுப்பினையைப் பற்றி எம்மால் இதற்கு முன்
எழுதிய நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதால் அதனைத் திரும்ப  இங்கு விவரித்து எழுதவில்லை .

 

பின்வரும் பாவங்களை அதாவது பாவ முனைகளை 10ம் பாவம் சார்ந்த அதாவது 10ம் பாவமுனை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை  இங்கு தொகுத்து தந்துள்ளேன்

10ம் பாவத்தின் 1ம் பாவத் தொடர்பு :

மேற்கண்ட 1ம் பாவம் , 10ம் பாவத்திற்குச் சாதகமற்ற அணியில் உள்ள ( எதிரணி ) பாவமாகும் . 10ம் பாவத்திற்கு இது 4ம் பாவமாக வரும் . ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு அதன் 4ம் பாவம் , குறிப்பிட்ட பாவத்தை 70 % வரை இயக்காது என்பதை வாசகர்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன் .

அதாவது குறிப்பிட்ட பாவத்தை 30 % வரை இயக்கிப் பிறகு அந்த பாவத்தை இயக்காது . அந்த வகையில் 10ம் பாவம் , 1ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் பொழுது இங்கு செயல்படும் பாவமாக லக்ன பாவம் உள்ளது .

லக்ன பாவம் என்பது ஒருவரது சுயகௌரவத்தை குறிக்கும் என்பதால் ஜாதகருக்குத் தொழில் மூலம் கௌரவம் மட்டுமே கிடைக்கும் . அதாவது தன்னுடைய கௌரவத்திற்காகத் தொழில் செய்வார் . மேற்கண்ட 1ம் பாவம் ,
தன ஸ்தானமான 2ம் பாவத்திற்கு , 12ம் பாவமாக உள்ளதால் தொழில் 2 மூலம் பணம் கிடைக்காது எனவும் பொருள் கொள்ளலாம் .

10ம் பாவம் , மற்ற பாவங்களைத் தொடர்பு கொள்ளும் பொழுது உண்டாகும் விளைவுகள் , 10ம் பாவத்திற்கும் , லக்னம் உள்ளிட்ட 12 பாவங்ககளுக்கும் சாதகம் , பாதகம் , நடுநிலை என்ற நிலை இருக்கும் . இருப்பினும் மேற்கண்ட விளைவுகள் அதிகமாக , 10ம் பாவம் , லக்னபாவம் 2ம் பாவம் , 6ம் பாவம் போன்ற நான்கு பாவங்களுக்கும் சற்று கூடுதலாக சாதக , பாதக நடுநிலையானப் பலனைத் தரும் .

மேற்கண்ட 10ம் பாவம் , 1ம் பாவத்தைத் தொடர்பு கொண்ட ஜாதகர்  புறச்சார்புடையத் தொழில்களை விட , அகச்சார்புடைய தொழில்களை செய்வது சிறப்பு . ஏன்னெனில் புறச்சார்புடையத் தொழிலில் பொருள்
விஷயங்கள் பிரதானமாக இருக்கும் . உடல் உழைப்பு ( 6ம் பாவம் )  என்பதும் சற்று கூடுதலாகத் தேவைப்படும்.

 
மேற்கண்ட 1ம் பாவம் , 6 , 2ம் பாவங்களுக்கு 8 , 12ம் பாவமாக  அமைவதால் புறச்சார்புடையத் தொழில்களை ஜாதகரால் சரிவர செய்ய  முடியாது


புத்தகத்தின் பெயர்: ஜாதகமும் தொழில் அமைப்பும் 

நூல் ஆசிரியர் : ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ்

மேற்கண்ட புத்தகத்தை பெற Call: 9382339084 

புத்தகத்தின் விலை ரூ 200/- 

Google pay No : 9445721793

For more Details:


1.  Website https://www.astrodevaraj.com/ 

2.  you tube channel  https://www.youtube.com/user/astrodevaraj

3. Face Book Link https://www.facebook.com/groups/stell ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக