திங்கள், 30 ஜனவரி, 2017

சென்னையில் இரண்டு நாள் தொழில் முறை சார ஜோதிடப் பயிற்சி

அனைவருக்கும் வணக்கம்..
சென்னையில் இரண்டு நாள் தொழில் முறை சார ஜோதிடப் பயிற்சி
(2 Days Advanced KP Stellar Astrology Special Class)

தகுதி:
சார ஜோதிட சக்கரவர்த்தியும், ஜோதிட நல்லாசிரியரும் ஆன #உயர்திரு_A_தேவராஜ் ஐயா அவர்களிடம் சார ஜோதிஷம் பயின்று இருக்க வேண்டும்.

பயிற்சியாளர்:
ஜோதிட நல்லாசிரியரும், சார ஜோதிட சக்கரவர்த்தியும் மற்றும் நமது குருநாதரும் ஆன #உயர்திரு_A_தேவராஜ் ஐயா அவர்கள்.

பயிற்சி நடைபெறும் இடம்:
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்,
#68, 3-வது தெரு, P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை–56,
கைப்பேசி: 93823 39084, 94457 21793. இணையதளம்: www.astrodevaraj.com

பயிற்சி நடைபெறும் நாள்:
04/02/2017 & 05/02/2017
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
பயிற்சி நடைபெறும் காலம்:

காலை 09:30 மணியிலிருந்து மாலை 05:30 மணி வரை
பயிற்சி கட்டணம்:
₹ 750/day
₹ 1500 (இரண்டு நாட்களுக்கு)
{காலை, மாலை இருவேளை தேநீர் மற்றும் மதிய உணவு உட்பட}
பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பும் வெளியூர் அன்பர்கள் ₹ 100 கூடுதலாக செலுத்த வேண்டும்.
பாடத் திட்டங்கள்:

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், இந்த சிறப்பு வகுப்பில் பாவத் தொடர்பு பற்றியும், மருத்துவ ஜோதிடம் பற்றியும் விரிவான முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பிரசன்னம் மற்றும் ஆளும் கிரகங்களை கொண்டு நேரத் திருத்தம் செய்தல் போன்றவைகளும் விளக்கப்படும்.

(i) பாவத் தொடர்பு:
அதாவது கொடுப்பினையும் தசாபுத்திகளும் புத்தகத்தில் பாவதொடர்பு என்றால் என்ன? என்கிற தலைப்பில் உள்ள கட்டுரை (பக்கம் 131 முதல் 151 வரை) வண்ணமயமான LED திரையில் display செய்யப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிகளை ஒவ்வொன்றாக படித்து விரிவான முறையில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

அதை தொடர்ந்து, அதே கொடுப்பினையும் தசாபுத்திகளும் புத்தகத்தில் ஜாதக பலன் நிர்ணயிப்பதில் அடிப்படை விதிகள் (சுமார் 20 விதிகள்) என்கிற தலைப்பில் உள்ள கட்டுரையும் (பக்கம் 172 முதல் 193 வரை) வண்ணமயமான LED திரையில் display செய்யப்பட்டு அதில் குறிப்பிட்டிருக்கும் விதிகளை ஒவ்வொன்றாக படித்து விரிவான முறையில் விளக்கம் அளிக்கப்படும்.

அடுத்து சார ஜோதிடத்தில் ஒரு கிரகம் நின்ற உபஉப நட்சத்திரத்தின் பங்கு, மூல பாவங்களின் செயல்பாடுகள், பாவ உட்தொடர்பு (cuspal interlinks), பாவ விரிவு (cuspal extension) போன்ற பாவத் தொடர்பு சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் விரிவான முறையில் பயிற்சி அளிக்கப்படும்.

(ii) மருத்துவ ஜோதிடம்:
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவார்கள்..
அதாவது ஒருவருக்கு எந்த விதமான நோயும் இல்லை என்றாலே அவர் செல்வந்தர் தான். இப்படிப்பட்ட நோயின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு..

யார் எல்லாம் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள், யார் எல்லாம் நோய்வாய்ப்படாமல் எப்போதும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள், மேலும், ஒரு ஜாதகருக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடும், அது எப்போது வரும், வரக்கூடிய நோய்கள் குணப்படுத்த கூடிய நோயாக இருக்குமா அல்லது குணப்படுத்த முடியாத நோயாக இருக்குமா, யார் யாருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் போன்ற மருத்துவ ஜோதிடம் சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும் தெளிவான முறையில் விளக்கம் அளிக்க இருக்கிறார் நம் குருநாதர்.

இந்த சிறப்பு வகுப்பு என்பது பெரும்பாலும் மருத்துவ ஜோதிடம் மற்றும் பாவத் தொடர்பு சம்பந்தமாக இருக்கும் என்பதை அன்பர்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

(iii) பிரசன்னம்
அடுத்த ஜாதகமே இல்லாதவர்களுக்கும், பிறந்த நேர குறிப்புக்களில் குழப்பம் உள்ளவர்களுக்கும் பிரசன்னம் இன்றியமையாதது ஆகும். நம் சார ஜோதிடத்தில் பிரசன்னம் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதை செய்முறை பயிற்சியோடு அதாவது LED திரையின் உதவியோடு நேரலையாக நடத்தப்படும்.

(iv) ஆளும் கிரகங்களை கொண்டு நேர திருத்தம் செய்தல்
அடுத்து வாடிக்கையாளர் கொடுக்கும் பிறந்த நேரம் சரிதானா என்பதை உறுதி செய்வது பொறுப்புள்ள ஜோதிடரின் முதற்கடமை ஆகும். நம் சார ஜோதிஷ அன்பர்கள் அனைவரும் இதை செய்ய தவறுவதில்லை. ஆளும்கிரக நிலைகளைக் கொண்டு எப்படி பிறந்த நேரத்தை சரி செய்வது என்பது பற்றி இன்னும் பல புதிய சூட்சமங்களுடன் விளக்கமாக செய்முறை பயிற்சியோடு.. அதாவது LED திரையின் உதவியோடு நேரலையாக நடத்தப்படும்.

பொதுவாக இது போன்ற சிறப்பு வகுப்புக்கள் வருடத்திற்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே நடத்தப்படுகிறது. சென்ற ஆண்டு, ஏப்ரல், ஜூன், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் நடைபெறும் இந்த முதல் சிறப்பு வகுப்பில் சார ஜோதிஷ அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது சார ஜோதிஷ அறிவினை மென்மேலும் மெருகேற்றிக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சார ஜோதிடத்தில் புலமை பெற ஐயா வின் புத்தகங்களும், இது போன்ற சிறப்பு வகுப்புக்களும் மிகவும் உதவியாக இருக்கும் என்பது நமது குருநாதரின் மூத்த மாணவர்கள் தெரிவிக்கும் கருத்தாகும்.

முன்பதிவு அவசியம்:
வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் உடனடியாக குருநாதரின் மூத்த மாணவரான காஞ்சி திரு. அண்ணாமலை ஐயா வை தொடர்பு கொண்டு தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அல்லது நமது குருநாதரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வகுப்புக்கள் எடுக்கப்படும் என்பதை இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

பயிற்சி மையத்திலேயே தங்க, வெளியூர் அன்பர்கள் சுமார் 15 நபர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நானும் இந்த சிறப்பு பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி,
ஜோதிஷ ஆச்சார்யா அருண் S,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக