வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி பரிசாக நமது ஜோதிட மென்பொருள் அப்டேட் 28-10-2016

அருண் சுப்ரமணியன்,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.


அனைவருக்கும் வணக்கம் !!
அனைவருக்கும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் சார்பிலும், நமது குரு சார ஜோதிட சக்கரவர்த்தி திரு.தேவராஜ் ஐயாவின் சார்பிலும் தீபாவளி வாழ்த்துக்கள்


நமது அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் பத்தாம் ஆண்டு மாநாடு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது அனைவரும் அறிந்ததே..

அது போல மாநாட்டிற்கு பிறகு..... வெளிவந்துள்ள நமது உயர்கணித சார ஜோதிட சாப்ட்வேர்-ன் பரிணாமும் (update) மிகப் பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (கடைசி சாப்ட்வேர் update-24/08/16). இன்று 28/10/2016 புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Update file-ஐ நமது குருநாதரின் இணையதளத்திற்கு சென்று www.astrodevaraj.com பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

இந்த அப்டேட்டில் எத்தனையோ வசதிகளை அறிமுகம் செய்துள்ளார் நம் குருநாதர். அதை அனைத்தையும் எழுத்து வடிவில் இங்கே குறிப்பிட்டேன் என்றால் Facebook ஏ hang ஆகலாம் போல. அதனால் ஒரு சில முக்கியமான விஷயங்களை மட்டும் நான் இங்கே குறிப்பிட்டு விளக்குகிறேன்.

1. ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் நட்சத்திர, உபநட்சத்திரத்தில் எந்த கிரகமும் இல்லையென்றால் மேற்குறிப்பிட்ட கிரகம் "+" என்கிற சிறப்பு அந்தஸ்தை பெறும்.

இங்கே மேற்குறிப்பிட்ட கிரகத்தின் வேலையை செய்ய எந்த கிரகமும் இல்லாததால், தன் வேலையை அதாவது தன் கையில் வைத்துள்ள பாவங்களின் காரகங்களை தானே தனது தசாபுத்தி காலங்களில் வலிமையாக செய்ய கடமை பட்டிருக்கின்றது.

இது போன்ற அமைப்பில் இருக்கும் பொழுது "+" அந்தஸ்தை பெறுகின்ற கிரகத்தின் மூல பாவங்களை எவ்வித கட்டுபாடுமின்றி நேரிடையாக தொடர்பில் வருமாறு வடிவமைத்துள்ளார் நம் குருநாதர்.

உதாரணத்திற்கு
6-ம் பாவ உபநட்சத்திர அதிபதி ராகு பகவான் எனக் கொள்வோம். மற்றும் அவரின் நட்சத்திர, உபநட்சத்திரத்தில் வேறு எந்த கிரகமும் இல்லை எனக் கொள்வோம்.

இங்கே அவர் நின்ற நட்சத்திரம் 5-யும், அவர் நின்ற உபநட்சத்திரமும் 5-ஐ காண்பிப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த அமைப்பிற்கு இதுவரை தொடர்பில் 5 மட்டும் தான் வந்திருக்கும். ஆனால் இந்த அப்டேட் முதல் தொடர்பில் 5,6 என வரும். காரணம் இங்கே ராகு பகவான் கட்டாயம் 6-பாவ வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றார். அதனால் தான் இந்த 6-ம் பாவத்தையும் தொடர்பில் வரும்படி செய்துள்ளார் நமது குருநாதர்.

உதாரண அமைப்பு:
ராகு கேது கேது தொ
(6)+ (5) (5) 5,6
ஆதலால் இனி 12 பாவங்களும் தொடர்பில் வந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது போன்ற நிலை ஆரம்ப நிலை அன்பர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தும்படி தெரிந்தாலும், கவனமாக ஆராய்ந்தால் பலன் கூறுவது மிக மிக எளிது.

2. அடுத்து ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திர அதிபதிகளின் பலன்களையே செய்யும். இதுவே சார ஜோதிஷத்தின் பிரதான விதியாகும்.
பொதுவாக ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் வாயிலாக தொடர்பில் 8 வருவதற்கும், மூலப்பாவத்தில் உள்ள 8 தொடர்பில் வருவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இதை உணர்த்தும் விதமாக இந்த அப்டேட்டில் மூலப்பாவத்தில் உள்ள 8 ஓ அல்லது 12 ஓ தொடர்பில் வந்தால் சிகப்பில் கொடுக்காமல் dark (bolded) black லேயே கொடுத்துள்ளார். நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலமாக 8,12 வந்தால் மட்டுமே சிகப்பு நிறத்தில் இருக்கும்படி செய்திருக்கிறார். இது நமது வேலையை வெகுவாக குறைக்கும்.

3. அடுத்து Full chart பக்கம் என்பது மற்ற பக்கங்களை விட சற்று முக்கியத்துவம் குறைந்தது என்பதால் அதை தசாபுத்தி பக்கத்திற்கு அருகில் நகர்த்தியிருக்கிறார். Cuspal links பக்கமே பிரதானமாகும். அதை full chart பக்கம் இருந்த இடத்திற்கு மாற்றியிருக்கிறார்.

4. நவகிரகங்களின் வலிமையை கிராப் (graph) மூலமாக அறிவது போல, இனி இந்த அப்டேட் முதல் பன்னிரு பாவங்களின் வலிமையையும் அகம் புறம் என தனித்தனியாக கிராப்-ன் உதவியோடு மிகச் சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.

5. அடுத்து..... தசாபுத்தி பக்கத்திற்கு சென்று ஒரு கிரகத்தின் தசையையோ, புத்தியையோ, அந்தரத்தையோ அல்லது சூட்சமத்தையோ கிளிக் செய்யும் பொழுது கீழே right bottom-ல் automatic க்காக தேதியும், ஜாதகரின் வயதும் மாறும்படி வடிவமைத்துள்ளார். இந்த வசதியானது என்னை மிகவும் கவர்ந்தது ஆகும். குருநாதருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

6. அடுத்து இந்த அப்டேட்டில் history என்ற வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதன் மூலமாக ஒரு வாடிக்கையாளர் நம்மிடம் இதற்கு முன்பு எப்பொழுது வந்திருந்தார், எத்தனை முறை வந்திருக்கிறார் என்பதனை அறிந்து கொள்ள முடியும். சாதாரணமாக ஏதாவது ஒரு பக்கத்தில் right click செய்தாலே இந்த history option காண்பிக்கும்.

7. அடுத்து Locate Dhasa option லேயே கிராப் உம் வரும்படி வடிவமைத்துள்ளார். இது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இனி எத்தனையோ அம்சங்கள் உள்ளன. மற்ற சிறப்பம்சம்களை நமது

உயர்கணித சார ஜோதிட வாட்ஸ்அப் குழுவில் ஆடியோ மூலமாக பதிவிட முயற்சிக்கின்றேன்..

நமது குருநாதரின் தோற்றத்தை போலவே உயர்கணித சார ஜோதிட முறையும் எளிய முறையாகும். அதனை இது போன்ற அப்டேட்கள் மூலம் மென்மேலும் எளிமையாக்கி வருகின்றார் என்றால் அது மிகையாகாது. சார ஜோதிட சக்கரவர்த்தியான நமது குருநாதர் உயர்திரு. தேவராஜ் ஐயா அவர்களுக்கு இக்குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்..
வாழ்க தேவராஜ் ஐயா..!!
வளர்க உயர்கணித சார ஜோதிடம்....!!!!

அப்டேட் சம்பந்தமாக ஒரு சில புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளேன். அதை அன்பர்கள் பார்த்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி..

அருண் சுப்ரமணியன்,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.
For details about our GURUJI DEVARAJ SIR
Click on the below link..
www.astrodevaraj.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக