வெள்ளி, 16 செப்டம்பர், 2016

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி அறிவிப்பு / கருத்துகேட்பு கூட்டம்

அனைவருக்கும் வணக்கம் .

11.09.2016 அன்று நமது அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் 10 ஆம் ஆண்டு ஜோதிட மாநாடு இனிதே மிக சிறப்பாக நடந்தேறியது.விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...

குறிப்பாக சார ஜோதிச பீஷ்மர் திரு.சுதர்சன், திரு.துரை குமாரவேலன், திரு.அண்ணாமலை, திரு.வெங்கடேச குருக்கள், திரு.ரமேஷ் குருக்கள், திரு. தாமரை கண்ணன், திரு.செந்தில்குமார், திரு.கோபண்ணா, திரு.குமரகுரு, திரு.நாவலர், திரு.ஆற்காடு ராம்குமார், திரு.பாலாஜி, திரு. ஜெயகுமார், திரு.அருண் திருச்சி, திரு.சொக்கலிங்கம் கோவா, திரு.பிரம்மபுத்திரன், மேலும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தேவ சார ஜோதிட சங்க நிறுவனர்.திரு.வளர்ராஜன், மற்றும் ஜோதிட ஆசிரியர்கள் ருத்ரா ஜெயராமன், கடலூர் கார்த்திகேயன், கன்னல் சின்னதுரை போன்றோருக்கும் நமது சங்கத்தின் சார்பில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....


இவ்விழா மிக சிறப்பாக நடத்தி இந்த ஆசிரியனுக்கு கௌரவத்தினை கொடுத்த  நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், 11.09.2016 அன்று ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....

அதை தொடர்ந்து 27.09.2016 (செவ்வாய்) அன்று காலை 10.00மணி முதல் மாலை 5.00 மணி வரை நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் , ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும்  நன்றி தெரிவிக்கும் விதமாக  நமது பயிற்சி மையத்தில் ஒரு  நாள் (மதிய உணவு உண்டு) பாராட்டு/ நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் ஜோதிட கேள்வி பதில் நடத்த உள்ளோம்..

  கலந்து கொள்ளும் நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் கட்டணம் எதுவும் இல்லை


 இந்த கூட்டத்தில் மாநாடு பற்றிய உங்கள் கருத்துக்கள் - மதிப்பீடு - விமர்சனம் இப்படி எதுவாக இருந்தாலும் அதை தயங்காமல் பதிவு செய்யவும். அது நம்மை சுயமதிப்பீடு செய்ய வசதியாக இருக்கும்.

நமது  சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்,  ஜோதிஷ ஆதித்யா பட்டம் பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் 27.09.2016 (செவ்வாய்) அன்று கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

அன்பர்கள் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

இப்படிக்கு,

A. தேவராஜ், சங்க நிறுவனர்
P.S சுதர்சன்  சங்க தலைவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக